peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Mobile Blog


a----------------------------------tamil.peperonity.net

Kadhija and Suri - 2

08.06.2013 04:47 EDT
Part - 2
அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கதீஜா அதிர்ந்து போய் சிலை போல
உட்கார்ந்திருந்தாள்.
"யா அல்லா!" என்று அவளது வாய் முணுமுணுத்தது.
"என்னை மன்னிச்சிரு கதீஜா," என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான் அஜ்மல்."எனக்கு வேறே வழியே தெரியலே!"
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அறையின் இன்டர்-காம் ஒலித்தது.
"காட்பாடியிலிருந்து போன். பேசுங்க சார்!"
மறுமனையில் பேசியது அப்துல். அவர்களது மூத்த மகன்.
"அம்மீஜான்! அப்பாஜான்! எங்களுக்கெல்லாம் பக்ர்-ஈத் பண்டிகைக்காகபுது டிரசெல்லாம் வாங்கி அனுப்பியிருக்காரு டாக்டர் சூரி! ஆளுக்கு ஆயிர ரூபாய் 'தோ·பா(பரிசு)'வும் கொடுத்திருக்காரு! தாத்தா ஆபரேஷன் முடிஞ்சதும் எங்களையும் சென்னைக்கு வரவழைச்சு, கிஷ்கிந்தா,கோல்டன் பீச், ப்ளேக் தண்டர் எல்லாம் சுத்திக் காட்டஏற்பாடு செய்திருக்காராம்
டாக்டர்! ரொம்ப குஷியா இருக்கு அம்மீஜான்!" பேசி முடித்து விட்டு கணவன்-மனைவி இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். கேப்பையில் நெய் ஒழுகிக் கொண்டிருக்கிறது! டாக்டர் சூரியின் இத்தனை கரிசனத்துக்கும் எது காரணம்
என்று இருவருக்கும் தான் நன்றாகத் தொரியுமே!
"இதுக்கப்புறம் என்னை நீங்க ஒதுக்கிட மாட்டீங்களே?" என்று கதீஜா பரிதாபமாகக் கேட்டாள்.
தப்பிக்கவே வழியின்றி மாட்டிக் கொண்டு விட்டோம் என்பதை அவள் இதற்குள் புரிந்து கொண்டிருந்தாள்.
"என்ன இப்படிக் கேட்கிறே கதீஜா?" என்று குமுறினான் அஜ்மல்."சொல்லப்போனா இனிமேல் தான் உன் மேலே எனக்கு அதிகமான அன்பும்மதிப்பும் வரப்போகுது. நீ நம்ம குடும்பத்துக்காக குர்பானி கொடுக்கப் போறே கதீஜா! உன்னை நான் எப்படி ஒதுக்க முடியும்?"
இருவரின் கண்களிலும் கண்ணீர் மல்கியது. அந்த உருக்கமான சூழ்னிலையைக் குலைப்பது போலக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அஜ்மல் எழுந்து கொள்வதற்குள், சிரித்த முகத்துடன் கதவைத் திறந்தபடி உள்ளேநுழைந்தார் டாக்டர் சூரி. "அஜ்மல் பாய்! உங்கப்பா நல்லாயிருக்காரு! இன்னிக்கு ஆஞ்சியோகிராம் பண்ணுவாங்க.
அப்புறம் ஒரு வாரம் கழிச்சோ, பத்து நாள் கழிச்சோ அவருக்கு ஆபரேஷன் நடக்கப்போகுது.அது ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.