peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Mobile Blog


gmail teaser
my.face4u.peperonity.net

ஜிமெயில் அட்டாச்மெண்ட் கோப்புகளை நேரடியாக கூகிள் டிரைவில் சேமிக்கும் வசதி..!

31.01.2015 02:31 EST
கூகிள் வழங்கும் இலவச சேவைகளில் மிக முக்கியமானது ஜிமெயில். உலகின் மில்லியன் கணக்கான மக்கள் இச்சேவையைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் இடம்பெற்றுள்ள வசதிகளும் ஏராளம். மின்னஞ்சல் அனுப்புவதோடு மட்டுமல்லாமல், மின்னஞ்சலில் விரும்பும் கோப்புகளையும், படங்களையும் அனுப்ப முடியும். SMS மூலம் ஜிமெயில் பெறலாம்..! அதுபோன்று உங்களுக்கு வரும் மின்னஞ்சலுடன் இணைந்துள்ள கோப்புகளை (Attached files, documents) தரவிறக்கம் செய்து கணினி சேமிப்பீர்கள். இனி அவ்வாறு சேமிக்கும்பொழுது, கூகிள் டிரைவிலும் அக்கோப்புகளை சேமிக்க கூடிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகிள். கூகிள் டிரைவ் என்றால் என்ன? அதாவது உங்களுக்கு வந்திருக்கும் மின்னஞ்சலில் உள்ள அட்டாச் பைல்களை நீங்கள் தரவிறக்கும்பொழுது, தானாகவே உங்களுடைய கணக்கில் உள்ள கூகிள் டிரைவிலும் (Google Drive) அக்கோப்புகள் சேமிக்கப்படும். நன்மைகள்: ஜிமெயிலில் டேப் இன்பாக் வசதி..! உங்கள் கணினியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு அக்கோப்புகளை இழந்துவிடு கூகிள் டிரைவில் உள்ள கோப்புகளை மீண்டும் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த முறையில் வீடியோக்கள், படங்கள், பிடிஎப் கோப்புகள், வேர்ட் டாகுமெண்ட்கள், எக்சல் டாக்குமெண்ட்கள் (Videos, IMages, PDF files, Word documents, Excel documents) போன்ற கோப்புகளினை சேமிக்க முடியும் என கூகிள் அறிவித்துள்ளது. ஜிமெயிலில் தமிழில் எழுத.. இனி நீங்கள் ஜிமெயில் டவுன்லோட் செய்த பைலை (Downloaded file) தொலைத்துவிட்டாலும், உடனடியாக கூகிள் டிரைவ் சென்று அவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். உங்கள் ஜிமெயில் மூலம் கிடைக்கும் கோப்புகள் அனைத்திருக்கும் இனி இரட்டைப் பாதுகாப்புதான். நன்றி.


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.