peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Mobile Blog


image
my.face4u.peperonity.net

ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி?

31.01.2015 16:18 EST
கம்ப்யூட்டரில் இணையம் பயன்படுத்தறீங்களா? அப்போ கண்டிப்பா இந்த விஷயங்ளையும் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கும். கணினி பயன்படுத்தும் அனைவருமே இணையம் பயன்படுத்தும் காலம் இது. இணையத்தில் எந்த ஒரு வலைத்தளத்தின்சேவையானாலும் நிச்சயம் அத்தளதில் நுழைவதற்கான பயனர் பெயரும், கடவுச்சொல்லும் உங்களுக்கு கொடுத்திருப்பார்கள். உதராணமாக நாம் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்த, பயனர் பெயர், மின்னஞ்சல் கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். இவ்வாறு சாதாரண மின்னஞ்சல் முதற்கொண்டு, வணிகம் தொடர்பான வலைத்தளங்கள், இன்டர்நெட் பேங்கிங், அலுவலக வேலைகள் தொடர்பான தளங்கள், சமூக வலைத்தளங்கள், இணையத்தினூடாக பணிபுரியும் வலைத்தளங்கள் என முக்கியமான தளங்களிலும் நாம் பயனர்பெயர், கடவுச்சொற்க்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் பாஸ்வேர்ட், பயனர் பெயர் பாதுகாப்பு குறித்து ஒருபோதும் சிந்திப்பதேயில்லை. உங்களுடைய வங்கி கணக்கு முதலான தகவல்களை கையாள வங்கிகளின் இணையத்தளங்களில் பயனர் பெயர், கடவுச் சொல் ஆகியவற்றை மிக எளிதாக, மற்றவர்கள் யூகிக்கும் வகையில் கொடுத்திருந்தால் உடனடியாக அவற்றை நீங்கள் ஒரு கடினமான கடவுச்சொல்லாக மாற்ற வேண்டும். எளிதாக நினைவு வைத்துக்கொள்வதற்காக உங்களது செல்லப் பிராணியின் பெயரோ, வீட்டிலுள்ளவர்களின் பெயரோ, மொபைல் நம்பர் அல்லது கார் நம்பர், அல்லது மாதங்களின் பெயர்கள், பொது பெயர்கள் என நீங்கள் வைத்திருப்பீர்கள்.. அவ்வாறானவர்களும் கடினமான பாஸ்வேர்ட் ஒன்றினை உடனடியாக அமைத்திட வேண்டும். கடினமான பாஸ்வேர்ட் என்றால் என்ன? மற்றவர்கள் யூகிக்காத வண்ணம், எண்ணும் எழுத்தும் சிறப்பு குறியீடுகளும் கலந்து கடவுச்சொல்லை அமைப்பது. உ.ம்: tH@n9@^^p@1a^! இவ்வாறு அமைப்பதன் மூலம் எந்த ஒரு கீலாக்கர் மென்பொருளோ அல்லது மற்றவர்களோ எள யூகித்து பாஸ்வேர்டை கண்டறிய முடியாது. இப்படி நாமாக பாஸ்வேர்ட் கொடுக்கலாம்.. அல்லது பாஸ்வேர்ட் உருவாக்கிக் கொடுப்பதற்கான மென்பொருளையும் பயன்படுத்தலாம். இவைகளை தானியங்கி முறையில் செயல்பட்டு, யாருமே யூகிக்க முடியாம ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.