peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


modi
a---------------------------------tamil1.peperonity.net

நரேந்திர மோடி எனும் சாமுராய்

போருக்கு ஆயத்தமாகும் பாஜக தளபதி

நரேந்திர மோடிக்கும் ராமாயண வாலிக்கும் ஒரு பெரும் ஒற்றுமை இருக்கிறது. இருவரும் அசகாய பலசாலிகள், யாராலும் நேர்மையான யுத்தத்தில் தோற்கடிக்க முடியாத சக்திமான்கள். யாருடன் எதிர்த்து போரிடுகிறார்களோ அவர்களின் பலத்தை இருவரும் பெற்று விடுவார்கள். காவிய நாயகன் வாலியை போலவே காவி நாயகன் மோடியும் அத்தகைய வரம் பெற்றவர். தன்னை எதிர்ப்பவர்களின் பலத்தையும் சேர்த்து பெற்றுக்கொண்டு களத்தில் இருப்பவர் . தேசிய அரசியலில் நரேந்திர மோடியின் எழுச்சிக்கு முன்பு வரை அரசியல் என்பது காங்கிரஸ் செய்யும் களவாணித்தனங்களை மட்டுமே மையமாக கொண்டு சுழன்று வந்தது.  ஆனால் மோடியின் தேசிய அரசியல் பிரவேசத்திற்கு பின் அனைத்தும் மோடி மையப்படுத்தப்பட்ட அரசியலாகவும் செய்தியாகவும் மாறி விட்டது. அரசியல், மற்றும் செய்தி உலகின் மைய அச்சு மோடியை வைத்து சுழல துவங்கி விட்டது.

பில்லா என்ற திரைப்படத்தில் ஒரு வசனம் “ என்னுடைய ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஏன் ஒவ்வொரு நிமிஷமும் நானே செதுக்கியது “ என்று அதைப்போலத்தான் மோடி, அவரின் அரசியல் வாழ்வு முழுக்க திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கப்பட்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரராக இருக்கிறார். சில நாள்களுக்கு முன்பு பீகாரில் பாஜக தயவுடன் இவ்வளவு நாளும் வெற்றி பெற்று அரசு அதிகாரத்தில் இருந்த நீதிஷ்குமார், தீடீரென மதச்சார்பின்மை பேய் பிடித்து பாஜகவுடனான 17 ஆண்டு கால கூட்டணியை முறித்து கொண்டார். அனைத்து பத்திரிக்கைகளும், ஆங்கில செய்தி ஊடகங்களும் ஏதோ நிதிஷ்குமார் அடுத்த பிரதமர் என்ற அளவுக்கு பேசத்துவங்கி விட்டன. மூன்றாவது அணி ஏற்பட்டு அது ஆட்சியை கைப்பற்றி விடும் என்பது போன்ற புது உளறல்களை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். மோடிக்கு இது பெரும் பின்னடைவு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான ஒரு கட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இவற்றை எல்லாம் பொய்பிக்க இருக்கிறார் மோடி எனும் சாமுராய். களத்தில் எத்தனை ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.