peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


bishop
a---------------------------------tamil1.peperonity.net

கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுக

“நிலநடுக்கம்  உண்டாகும் சாத்திமுள்ள பகுதியில் அணுமின் நிலையம் அமைவது ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது”

“2003 பிப்ரவரி 9ம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19ம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன்குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின.”

நிலநடுக்கம் ஏற்படக் கூடிய பகுதியில் இந்த அணு மின் நிலையம் கட்டப் படுவதினால் நில நடுக்கம் வரும் பொழுது பெரும் விபத்து ஏற்பட்டு பேரழிவை உண்டாக்கும் என்கிறார்கள்.


[2]

இவ்வளவு பெரிய ஒரு திட்டத்தை, இருபதினாயிரம் கோடி ரூபாய்களை விழுங்கும் ஒரு திட்டத்தினை இந்த இடத்தில் அமைக்க திட்டமிடும் முன்னால், இந்த எளிய பாதுகாப்புப் பிரச்சினையைக் கூடவா இதைத் திட்டமிட்டவர்கள் அலசியிருக்க மாட்டார்கள்? அது நம் விஞ்ஞானிகளின், பொறியாளர்களின் அடிப்படை அறிவையே கேலிக்குள்ளாக்கும் ஒரு குற்றசாட்டு அல்லவா?

தமிழ் நாட்டின் தென் பகுதிகளில் எத்தனை முறை எந்த அளவில் கடந்த 200 ஆண்டுகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளன? அப்படியே ஒரு குற்றசாட்டை வைத்தாலும் அதன் உண்மையைப் பற்றிப் பேசக் கூடிய தகுதி உள்ளவர்கள் நிலவியலாளர்களும், கட்டிட நிபுணர்களும், பாதுகாப்பு பொறியாளர்களும் அல்லவா? இந்தக் குற்றசாட்டை வைத்து அப்பாவி மக்களைப் பயமுறுத்தும் முன்னால் எத்தனை நிபுணர்கள் கலந்தாலோசிக்கப் பட்டார்கள்?

அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை முழுவதுமே நிலநடுக்கப் பகுதிகள்தான். அங்கு நில நடுக்கம் அடிக்கடி நிகழ்கின்றன. அதே பிரதேசத்தில் ஏராளமான அணு சக்தி நிலையங்களும் ஆராய்ச்சி சாலைகளும் அமைக்கப் பட்டுள்ளனவே? கடந்த 50 ஆண்டுகளில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் இந்த அணு நிலையங்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லையே? அதே ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.