peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

கண்களைத் திறந்த கமலுக்கு நன்றி!

தமிழகத்தில்   ஜனவரி கடைசி வாரம் மிகவும் பரபரப்பான நிகழ்வுகளால்  திரைப்படத்தின் உச்சகட்டக் காட்சி போல மாறி இருந்தது. இந்த நிகழ்வுகளின் அடிநாதம் கமலஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்’ படத்தால் விளைந்தது. இந்த நிகழ்வுகள், நம்மைச் சுற்றிலும் உள்ள மனிதர்களை, நமது தலைவர்களை, நமது கலைஞர்களை புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது எனில் மிகையில்லை.

‘இஸ்லாமிய சகோதரர்’களை சீண்டிய ‘கலைஞானி’

நடிகர் கமலஹாசன் இயக்கி, தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்த ’விஸ்வரூபம்’ படம் அதன் தயாரிப்பு உத்திகளுக்காக பரவலான கவனம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு நிலவியது. இடையே ’திரையரங்கில் வெளியாவதற்கு முன்னரே டிடி.எச்-சில் படம் வெளியாகும்’ என்ற கமலின் அறிவிப்பால் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்த நாடகம் சில நாட்களுக்கு நடந்தது.

அந்த நாடகம் அமுங்கிய வேளை, இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்திரித்திருப்பதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கத் துவங்கின. படத்தின் முன்னோட்ட துண்டுக் காட்சிகளைக் கண்டு (டிரெய்லர்) இந்த முடிவுக்கு முஸ்லிம் அமைப்புகள் வந்தன.

இது தொடர்பாக கமலை முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்தபோது, படம் வெளியாகும் முன்னர் கண்டிப்பாக அவர்களுக்கு திரையிட்டுக் காட்டுவதாக உறுதி அளித்தாராம். இதைத் தான், வேலியில் போன ஓணானை எடுத்து மடியில் கட்டிக் கொண்ட கதை  என்பார்கள்.

இது ஆர்ப்பாட்டமா? மிரட்டலா?

திட்டமிட்டபடி விஸ்வரூபம் ஜனவரி 25-ம் தேதி வெளியாகி இருக்க வேண்டும். அதற்கு முன் இந்தப் படத்தை தனது ஆருயிர் நண்பர்களான ‘இஸ்லாமிய சகோதரர்’களுக்கு திரையிட்டுக் காட்டினார் கமல். படத்தில் ஆப்கானிஸ்தானில் இயங்கும்  தலிபான் பயங்கரவாதிகள் குறித்த காட்சிகள் இருக்கவே, இஸ்லாமிய சகோதரர்கள் வெகுண்டார்கள். இந்தப் படம் இஸ்லாமியர்களை தவறாக சித்திரிக்கிறது என்று போர்க்கொடி உயர்த்தினார்கள்.

அவர்களை சமாளிக்க கமலால் முடியவில்லை. ”நான் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.