peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

பாடும் பெண்களை கொலை செய்யுங்கள் – காஷ்மீர ஃபத்வா

மே டையில் பாட்டு பாடுவது ஹராம். இறைவனின் ஆணைக்கு எதிரானது எனவே பாட்டு பாடும் அந்தப் பெண்கள் ஷரியா சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் மீது சமூகப் புறக்கணிப்பை கோருகிறேன். இதை அவர்கள் மீறினால் “ஏக இறைவனின் திருப்பெயரால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்று இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரின், ஒரு பகுதியில் உள்ள இமாம் பஸீருதீன் அகமது வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்தார். அந்த இளம் பெண்களுக்கு– கலைத்தாகம் கொண்ட பெண் சிறார்களுக்கு எதிராக கொலைமிரட்டல் விடுத்தவர் ஜம்மு காஷ்மீரின் தலைமை மெளலவி. இதற்கு எதிராக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தேசிய மாநாட்டுக் கட்சியின் இளம் முதல்வர் உமர் அப்துல்லா, எதிர்க்கட்சித் தலைவி மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் கூட அந்த ஃபத்வா எனும் பகிரங்கக் கொலை மிரட்டலைக் கண்டிக்காமல், நடவடிக்கை எடுக்காமல் அந்த இளம் பெண்களின் இசைக்குழுவான “பிரகாஷ்” (paragaash)-க்கு மட்டும் ஆதரவு தெரிவித்தனர்.



இவை எல்லாம் பாகிஸ்தான் ஆக்ரமித்துத் திருடிக்கொண்ட காஷ்மீரில்; தாலீபான்களின் காட்டுமிராண்டித்தனம் அரங்கேறும் ஆக்ரமிப்பு காஷ்மீரில் நடக்கவில்லை. ஜனநாயகத்தின் வாசலை வெளிச்சமிட்டுக் காட்டும் பாரத மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. நாகரிக சமுதாயமான பாரத சமுதாயத்தில் இந்த அநாகரிகமான செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை பேசும் எந்த நாளேடும் இது குறித்துப் பேசவில்லை. விவேகானந்தர் படத்தை பிரசுரிப்பதால் கற்பழிப்புகள் அதிகமாகிறது என்று அவதூறு செய்தி பரப்பிய இழிவான The Hindu நாளேடு இது பற்றி உடனே செய்தி வெளியிடவில்லை. ஆபாசத்தையும் கலாசாரக் கேட்டையும் பெருமளவு வியாபாரப்படுத்தும் ஆபாச Outlook இதழோ, இன்ன பிற காசு வாங்கிக்கொண்டு ஊடக வேசித்தனம் புரியும் இதழ்களோ, இது பற்றி வாயே திறக்கவில்லை. உச்சபட்சக் குரலில், இந்தியாவில் மகளிர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன, பெண்களுக்கு சுதந்திரம் இல்லை, கலாசாரக் காவலர்களான பாஜக, சங்பரிவார் கும்பல்களை அழிக்க வேண்டும் என்று தினமும் பிரசாரம் செய்யும்– ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.