peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

அப்சலுக்கு தூக்கு: பயங்கரவாதிகளுக்கு படிப்பினை

நாடாளு மன்றம்  மீதான தாக்குதலில் மரண தண்டனை விதிக்கப் பட்ட  முகமது அப்சல் குரு ஒரு வழியாக, தில்லி  திஹார் சிறையில் பிப். 9-ம் தேதி தூக்கிலிடப் பட்டிருக்கிறார். 2006-ம் ஆண்டிலிருந்தே அப்சல் குரு மீதான தூக்கு  தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆயினும் சிறுபான்மையினரின் வாக்குவங்கி மீதான பாசத்தில் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலம் கடத்தி வந்தது. அப்சல் தூக்கிலிடப்பட்டதை ”எதுவும் செய்யாமல் இருப்பதைவிட தாமதமாகவேனும் செய்தது நல்லது தான்” என்று விமர்சித்திருக்கிறார் குஜராத் முதல்வர் மோடி உண்மை தான்.

இந்த விவகாரத்தில் இதுவரை நடந்திருப்பதை  பின்னோக்கிப் பார்ப்பது இப்போது அவசியமாகி இருக்கிறது….



2001-ம் ஆண்டு, டிசம்பர் 13-ம் தேதி: இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கறுப்புநாள். அன்று தான் நமது ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றம் அண்டைநாட்டிலிருந்து இயக்கப்படும்  பயங்கரவாதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டது. அந்தத் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஸ்-ஏ-முகமது, லஸ்கர்-ஏ-தொய்பா ஆகிய பயங்கரவாத இயக்கங்களைச் சார்ந்த ஐந்து பயங்கரவாதிகள் ஈடுபட்டனர்.

உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கான அடையாள அட்டைகளுடன் அத்துமீறி நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்த இந்த ஐவரும் கண்மூடித்தனமாக சுப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அப்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. நமது மக்கள் பிரதிநிதிகளையே இலக்காகக் கொண்டு நாடாளுமன்ற அவைகளை நோக்கி பயங்கரவாதிகள் முன்னேறினர்.

ஆனால் நமது பாதுகாப்புப் படையினர் தீரத்துடன் போரிட்டு, அந்த முயற்சியை முறியடித்தனர். எனினும் இந்தப்  போராட்டத்தில் நமது வீரர்கள் 7 பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர்; பத்திரிகையாளர் உள்பட மேலும் இருவர்  உடன் கொல்லப்பட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நமது வீரர்கள் பயங்கரவாதிகள் ஐவரையும் சுட்டு வீழ்த்தினர்;  நமது நாடாளுமன்றமும் மக்கள் பிரதிநிதிகளும் காப்பாற்றப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தில் 15 பேர் படுகாயம் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.