peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


srilanka eastern t
a---------------------------------tamil1.peperonity.net

இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 1

இலங்கையின் தமிழர் தாயகப் பகுதியான வடக்குகிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாணம்
மிகவும் முக்கியத்துவம் மிக்கதொன்றாகும். மிகவும் செழிப்பு மிக்க இம்மாகாணத்தில் கடல் மற்றும் தரை வளங்கள் அதன் முதுகெலும்பாகக் காணப்படுகின்றது. “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்” என்ற வாசகம் கிழக்கு மாகாணத்திற்கும் பொருந்தும். அந்தளவுக்கு சகல வளங்களும் நிறைந்த மாகாணமாகவே அது விளங்குகிறது . இந்த மாகாணம்
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது

கிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர் பண்டைய மன்னராட்சியின் கீழ் சிற்றரசுகளை அமைத்து ஆண்டு வந்தனர். ஆனால் இந்த தமிழர்களுடைய பாரம்பரியமான நிலங்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப் பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அதேவேளையில் இஸ்லாமியர்களும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாகவும் தமிழர்களுடைய நிலங்களை தமதுடைமையாக்கியுள்ளனர் என்பதும் கசப்பான வரலாறாகும்.

கிழக்கு மாகாணத்திற்கு வியாபார நடவடிக்கைக்காகச் சென்ற முஸ்லிம்கள் அப்பகுதியில் தற்காலிகமாகத் தங்கி வியாபாரத்தில் ஈடுபட்டனர். சிலர் நிலச்சுவாந்திரர்களான தமிழர்களிடம் அவர்களின் விவசாய செய்கைக்கு கூலிகளாகவும் இருந்து தொழில் செய்து வந்தனர். ஆனால் பின்னர் வியாபாரத்திற்குச் சென்றவர்களும் விவசாயத்திற்கு கூலிகளாக இருந்தவர்களும் எவ்வாறு அங்கு தமது இருப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பதும் காணி நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாகி அப்பகுதி தமது தாயகப் பகுதி என எவ்வாறு மாற்றிக் கொண்டார்கள் என்பதும் இன்று மறைக்கப்பட்ட வரலாறாகவே உள்ளது. இன்று முஸ்லிம் புத்தி ஜீவிகளும் அரசியல் வாதிகளும் இந்த வரலாற்றைத் திரித்துக் கூறி கிழக்கை ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.