peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

கசாப் தூக்குத் தண்டனையும் காங்கிரசின் தந்திரங்களும

மு ம்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலில் கைது செய்யப்பட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப் கடந்த நவ. 20 ம் தேதி, பூனா, எரவாடா சிறையில் ரகசியமாகவும், அவசரமாகவும் தூக்கிலிடப்பட்டிருக்கிறான். பயங்கரவாதிகளுக்கு கடைசியில் கிடைக்கப்போவது இது தான் என்பதை காலம் கடந்தேனும், நமது அரசுகள் வெளிப்படுத்தி இருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆயினும், இந்த தண்டனை நிறைவேற்றத்தின் பின்னணியில் உள்ள மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தந்திரத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

2008, நவம்பர், 26 ம் தேதி, பாகிஸ்தானின் லஷ்கர் – இ- தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் கடல்வழியாக மும்பையில் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்தனர். அவர்கள் மும்பை ரயில் நிலையத்திலும் நட்சத்திர ஓட்டல்களிலும் புகுந்து கண்மூடித்தனமாக நடத்திய கொடூரத் தாக்குதல்களில் காவல் துறை அதிகாரிகள் பலர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்; 300 பேர் படுகாயம் அடைந்தனர். தாஜ், டிரைரென்ட் ஓட்டல்களில் பதுங்கிக் கொண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் 60 மணிநேரம் போராடி வென்றனர். இந்தச் சண்டையில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; கசாப் மட்டும் துப்பாக்கியும் கையுமாகப் பிடிபட்டான்.

இத்தாக்குதலால், இந்தியா மீதான பாகிஸ்தானின் வெறுப்பூட்டும் ரகசிய போர்முறை அம்பலமானது. ஏற்கனவே நாடாளுமன்றம் தாக்குதல், மும்பை தொடர்குண்டு வெடிப்பு என்று பல பயங்கரவாதச் செயல்களைப் பார்த்திருந்தாலும், மும்பை 26/11 தாக்குதல் உலகிற்கே அதிர்ச்சி அளிப்பதாக, பயங்கரவாதத்தின் புதிய பரிணாமத்தை வெளிப்படுத்தியது. தவிர, உள்ளூரில் ஆதரவுத் தளம் இல்லாமல் இத்தகைய திட்டமிட்ட கொடூரத் தாக்குதலை நடத்துவது சாத்தியமல்ல என்பது நமது அரசுகளுக்கும் விசாரணை அமைப்புகளுக்கும் புரிந்தது.

பயங்கரவாதியாக இருந்தபோதும், கசாபுக்கு இந்திய சிறையில் மிகுந்த பாதுகாப்பும் முக்கியத்துவமும் அளிக்கப்பட்டது. அவனை காவல்துறையினர் விசாரித்தபோது கூட சித்ரவதை செய்யவில்லை. ஒரு பக்குவப்பட்ட ஜனநாயக நாடு என்பதை கசாப் வழக்கில் நமது அரசு நிரூபித்தது. கசாப் கோரிய ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.