peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

பயங்கரவாதத்தின் பிடியில் இஸ்லாமிய இளைஞர்கள்

அரசின் சலுகையில் உயர் படிப்பு– அரசுக்கு எதிராக பயங்கரவாதச் செயல்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகள்

2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் 11 பேர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன. கைது செய்யப்பட்டவர்களில் ஆறு பேர்கள் பெங்களுரிலும், ஐவர் ஹுப்ளியிலும் கைது செய்யப்பட்டார்கள்.  மேலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் ஒருவரும், தொடர்ந்து பெங்களுரில் ஒருவரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி கைது செய்யப்பட்டார்கள்.  இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பத்திரிகையாளர், ஒருவர் மருத்துவர், வேறு ஒருவர் ராணுவத்தில் ஆய்வு மற்றும் விரிவாக்கத் துறையில் ஜூனியராக ஆய்வுப் படிப்பு படிப்பவர். கைது செய்யப்பட்டவர்கள், கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபடுகின்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள்; மெத்த படித்த படிப்பாளிகள் என்பது உண்மையாகும்.  இவ்வாறு படித்தவர்கள் அனைவரும் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் பயின்றவர்கள்.  ஆகவே அரசின் சலுகையில் கல்வி பயின்று, அரசுக்கு எதிராகவே பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துகிறார்கள். இது, இவர்களை பற்றிய ஒரு ஆய்வாகும்.  பெங்களுரில் இவர்கள் கைது செய்யப்பட்டதின் காரணமாக பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தார்கள்.



2005ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ஆம் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் சில விஷயங்கள் வெளிவந்துள்ளன.  கட்டுரையின் தலைப்பு, “ தி மித் ஆஃப் தி மதரஸா” (The Myth of the Madrassa ) . இந்தக் கட்டுரையில் 75 பயங்கரவாதிகளை சுய ஆய்வு செய்த போது 53 சதவீதமான பயங்கரவாதிகள் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் என்பது தெரியவருவதாக குறிப்பிட்டு இருந்தார்.  இதே கட்டுரையில் அலிகார் பல்கலைக் கழகத்தில் துவக்கிய சிமி இயக்கத்தின் உறுப்பினர்களில் பெரும்பாலோர் பட்ட படிப்பு படித்தவர்கள் என்பதும், பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவருகிறது.  இவ்வாறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியவர்களில் ஐ.டியில் பொறியியல் படிப்பு ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.