peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01

“மகா மனிதன்” .
தலித்தாகப் பிறந்தாலும் தலைவராக ஆக வாய்ப்புத் தரும் ஹிந்து சமூகத்தின் அந்தத் தலைவருக்கு பங்களாதேசத்து மக்கள் அளித்த பாசப் பெயர் இதுதான் – “மகா மனிதன்”. அவரது இயற்பெயர் ஜோகேந்திரநாத் மண்டல் . சுதந்திரப் போராட்டக் காலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவர். பொதுவான ஹிந்து சமூகத்திற்கே உரித்தான் நன்னம்பிக்கை மனநிலையில் முஸ்லீம் சமூகத்தோடு ஹிந்து சமூகம் நல்லிணக்கத்தோடு வாழமுடியும் என்று நம்பியவர். பாகிஸ்தான் உருவாகக் காரணமான முகம்மது அலி ஜின்னாவின் நண்பர். பாக்கிஸ்தான் உருவாக வேண்டும் என்று பேசியவர்.

இவரது உழைப்பால் முஸ்லீம் லீக் பங்களாதேசில் பல முறை காப்பாற்றப்பட்டது. பல முறை ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக, அறிவுத் தெளிவும் சமூக நல்லிணக்க நோக்கும் கொண்ட இவரே அமைந்தார். இருப்பினும், இஸ்லாமிய மனநிலை மற்ற மதத்தவர்களுக்கு வாழ்வுரிமை வழங்காது என்ற நிதர்சனம் அவரது முகத்தில் அறைந்தது.

மற்ற மதத்தினருக்கு, முக்கியமாக நாமதாரிகள் போன்ற தலித்துகளுக்கு, இஸ்லாமியத்தின்படி கொல்லப்பட்டு அழிக்கப்படுவதே விதியாகிவிட்டதை நேரடியாக அறிந்து தவித்தார் அவர். நன்னம்பிக்கை சிதறிப்போய், நல்லிணக்கம் நச்சாகிவிட்டதறிந்து பதறிப் போய், பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அப்போது அவர் எழுதிய அந்த உணர்ச்சி மிகுந்த, துரோகத்தின் வலி சுமக்கும் அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பே இத்தொடர். ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைவர்களை நம்பும் இந்துக்களுக்கு,  குறிப்பாக தலித் தலைவர்களுக்கு, என்ன கதி ஏற்படும் என்பதற்கு இந்தக் கடிதம் ஒரு வரலாற்று சாட்சியம்.

இவர் பற்றி மேலும் அறிய:
தமிழ் பேப்பர் தளத்தில் | | கூட்டாஞ்சோறு தளத்தில் | | விக்கிப்பீடியா தளத்தில்

கடிதத்தின் ஆங்கில மூலம் இங்கே:
ஜோகேந்திரநாத் மண்டலின் ராஜினாமா கடிதம்

வரலாறும், நம் பெரியோர்களும் மீண்டும் மீண்டும் நடைமுறை உண்மைகளைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.