peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02

ஜோகேந்திரநாத் மண்டலின் ராஜினாமாக் கடிதத்தின் மொழிபெயர்ப்பு தொடர்கிறது ….

முந்தைய பாகம்: பாகம் 1  

மூலம்: ஜோகேந்திர நாத் மண்டல்
தமிழில்: ராஜசங்கர்

வங்காளப் பிரிவினை

8. இந்த விஷயத்துடன் நான் வங்காளப் பிரிவினையை எதிர்த்தேன் என்பதும் இந்த இடத்தில் சொல்லப்படவேண்டும்.  இதன் தொடர்பாகப் பரப்புரையை தொடங்கிய போது எல்லா பக்கங்களில் இருந்தும் பெருவாரியான எதிர்ப்பை மட்டுமல்லாது சொல்லமுடியாத அவமானம், இழிசொற்களைச் சந்திக்கவேண்டியிருந்தது.

மிகுந்த வேதனையோடு இந்திய-பாகிஸ்தானிய துணைக்கண்டத்தில் இருந்த முப்பத்திரண்டு கோடி இந்துக்களும் என்னை புறக்கணித்து என்னை இந்துக்கள் மற்றும் இந்து மதத்தின் எதிரி என்று சொல்லிய நாட்களை நினைவுகூர்கிறேன். ஆனால் என்னுடைய பாகிஸ்தானிய விசுவாசம் இவற்றால் பாதிக்கப்படவோ அல்லது மாறவோ இல்லை. என்னுடைய அழைப்பை ஏற்று பதிலளித்த வங்காளத்தின் 70 லட்சம் பட்டியல் வகுப்பினருக்கு என்னுடைய நன்றிகள். அவர்கள் எனக்கு மாறாத ஆதரவும் ஊக்கமும் அளித்து வந்தார்கள்.



9. ஆகஸ்டு 14, 1947 இல் பாகிஸ்தானின் உருவாக்கத்திற்கு பின் நீங்கள் பாகிஸ்தானின் அமைச்சரவையை அமைத்தீர்கள். அதில் நான் ஓர் அமைச்சராக பதவியேற்றேன். அதே போல் காஜா நஜிமூதீன் மேற்கு வங்களாத்தில் தற்காலிக அமைச்சரவையை அமைத்தார். ஆகஸ்ட் 10 இல் நான், காஜா நஜிமூதீன் கராச்சியில் இருந்தபோது பேசி, அவருடைய அமைச்சரவையில் இரண்டு பட்டியல் வகுப்பினரை அமைச்சர்களாக சேர்க்கும்படி கோரிக்கை வைத்தேன். அவர் அதை இன்னும் சில காலங்களில் செய்து விடுவதாக உறுதியளித்தார். ஆனால், அதன்பின்பு நீங்கள், காஜா நஜிமூதீன், மற்றும் இப்போதைய முதல் அமைச்சர் நூருல் அமீன் ஆகியோருடன் இதன் தொடர்பாக நடந்த விரும்பத்தகாத மற்றும் ஏமாற்றமளிக்கும் பேச்சுவார்த்தை நடந்தது.

எப்போது எனக்கு காஜா நஜிமூதீன் எதாவது ஒரு [வலுவற்ற] காரணத்தைச் சொல்லி இந்த விஷயத்தை தவிர்க்கிறார் என்று புரிந்ததோ அப்போது நான் பொறுமையிழந்து எரிச்சலடைந்தேன். மேலும் பாகிஸ்தானின் முஸ்ஸீம் லீக் தலைவருடனும் மேற்கு வங்களா முஸ்ஸீம் லீக்கின் தலைவருடனும் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.