peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

பாகிஸ்தானை நம்பக் கூடாது

சி ல தினங்களுக்கு முன் ஜனவரி மாதம் 8ம் தேதி பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுபாட்டு கோட்டின் அருகே இந்தியப் பகுதியில் காவல் செய்து கொண்டிருந்த இந்தியப் படையினரைத் தாக்கி இரண்டு ஜவான்களைக் கொன்றதுடன், இருவரின் தலையையும் வெட்டி, உடலை சின்னா பின்னப்படுத்தி, ஒரு ஜவானின் தலையை தங்கள் வெற்றியின் பரிசாக எடுத்துச் சென்ற சம்பவம் இந்தியர்களின் மனதில் சொல்லொணாத் துன்பத்தை கொடுத்துள்ளது. இந்த சம்பவத்தின் மூலம் பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் தனது அயோக்கிய தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது.



இந்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. 1947லிருந்து பாகிஸ்தான் பாரத நாட்டை துண்டாட முயலும் போதொல்லாம் ஓட்டுக்காக இந்திய அரசியல்வாதிகள், இஸ்லாமியர்களை தாஜா செய்யும் விதமாக, பாகிஸ்தானுக்கு பதில் கொடுப்பதாக எண்ணிக்கொண்டு அகிம்சை போதிக்கின்றார்கள். இந்தக் கட்டுரையில் பாகிஸ்தானின் நம்பகத் தன்மையை பற்றி பல்வேறு சம்பவங்களை சுட்டிக் காட்டுவதுடன், மதசார்பற்ற அரசியல்வாதிகள், இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக பாகிஸ்தானை சமாதானப்படுத்தும் செயல்பாடுகளையும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் ஊடுருவுல்களும் இந்தியாவின் இறையான்மைக்கு சவால் விடும் செயலாகும், எவ்வாறு பாகிஸ்;தான் இந்தியாவில் தங்களது பயங்கரவாத செயல்களை அறங்கேற்றம் செய்கிறார்கள் என்பதை சற்றே அலசுவோம்.

முந்தைய சம்பவங்கள்

1971-ல் நடந்த யுத்தத்திற்கு பின் பல முறை பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய துருப்புகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்கள். கார்கில் போர் முடிந்து ஏழு மாதங்களுக்கு பிறகு 2000 –ம் வருடம் பிப்ரவரி மாதம் ரஜோரி மாவட்டத்தில் நௌஷேராவில் ஏழு இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தானின் பி.ஏ.டி.எஸ். திடீர் தாக்குதல் நடத்தி கொன்றது. 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக ஜெனரல் பர்வேஸ் அஷ்பாக் கயானி (General Pervez Ashfaq Kayani) பொறுப்பு ஏற்ற பின் எல்லைக் கட்டுப்பாடு கோட்டின் அருகே நடத்தும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்ததுள்ளது. 2009-ம் ஆண்டு குளிர்காலத்தில் நான்கு 107 மி.மீட்டர் ராக்கெட் மூலம் புல் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.