peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

அரபு நாடுகளில் பணிப்பெண்கள்: தொடரும் கொடூரங்கள்

முதலில் கீழ்க்கண்ட செய்திகளைப் படித்து விடுங்கள்..

செய்தி ஒன்று : 13 ஆண்டுகளாக தன்னிடம் வேலை பார்க்கும் பெண்ணை அடைத்து வைத்து வேலை வாங்கியும், சம்பளமும் இந்த 13 ஆண்டுகளாக தராமல் கொடுமை செய்திருக்கிறார் ஒரு சவுதியைச் சேர்ந்த ஒரு அரபி. இந்த முறையும் ஒரு இலங்கைப் பெண்தான் இந்தக் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்.

செய்தி இரண்டு : கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் ஒரு சவூதி குடும்பம் தன்னிடம் வேலை பார்க்கும் இலங்கை பணிப்பெண்ணை 24 ஆணிகளை உடல் முழுதும் அடித்து சித்திரவதை செய்திருக்கின்றனர், கணவனும், மனைவியுமாகச் சேர்ந்து. ஒரு சக மனிதனை / மனுஷியை சாதாரணமாக குடும்பம் நடத்தும் கணவனும், மனைவியும் சேர்ந்து உடலில் ஆணி அடிப்பதை நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? எல். பி. ஆரியவதி என்ற இலங்கைப் பெண்ணிற்கு இந்தக் கொடுமை நடந்திருக்கிறது.



செய்தி மூன்று : ஒரு இந்தோனேஷியப் பெண்ணை முகம் எல்லாம் கத்தரிக்கோலால் அங்கங்கே வெட்டி எடுத்திருக்கின்றனர் இன்னொரு சவூதி தம்பதியினர். உடலெங்கும் ஆங்காங்கே சூடு போட்டிருக்கின்றனர். தலை முதல் கால் வரை அந்தப் பெண்ணை கொடுமை செய்திருக்கின்றனர்.

செய்தி நான்கு : இன்னொரு அன்பு மிக்க சவூதி தன்னிடம் வேலை செய்த பெண்ணை துன்புறுத்தி கொலை செய்ததுடன், உடலை ரோட்டில் வீசி எறிந்துவிட்டுச் சென்றிருக்கிறார். இந்தோனேசிய அரசு இதை மனிதத் தன்மையற்ற செயலுக்கும் அப்பாற்பட்டது இவர்கள் இழைத்திருக்கும் கொடுமைகள் என்கிறது. மனிதத் தன்மையற்ற செயலை விட மோசம் எனில் எவ்வளவு கொடூரர்களாய் இருக்க வேண்டும்?

செய்தி ஐந்து : முகத்தில் குத்தியே வீட்டு வேலைக்கு வந்தப் பெண்ணை கொலை செய்த அரபி.

மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளுதல் தொடரும் சம்பவம். அரபிகளின் உடல் ரீதியான கொடுமையையும், வெறியையும் தாங்க முடியாமல்.

இதெல்லாம் வெறும் சாம்பிள் தான். சவூதி, குவைத், கத்தார், எமன், போன்ற நாடுகளில் வேலைக்குச் செல்லும் பணிப்பெண்களில் கிட்டத்தட்ட 80 சதவித பெண்களின் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.