peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

அயோத்தி: ஆலயம் அமைவதை ஆதரிக்கும் ஷியாக்கள்

1990-களின் தொடக்க ஆண்டுகளான 90-91 களில் நான் எந்தவொரு அமைப்பின் சார்பிலும் அல்லாமல் என் சொந்தப் பொறுப்பில் அயோத்தியில் பல மாதங்கள் தங்கினேன். ஹிந்து-முகமதியர் ஆகிய இரு தரப்பு மக்களையும் வீடு வீடாகச் சென்று சந்தித்தேன்.

ராம ஜன்ம பூமியில் வலுக்கட்டாயமாக எழுப்பப் பட்டிருக்கும் பாப்ரி வெற்றிச் சின்ன மண்டபம் அகற்றப்பட்டு அங்கு ஸ்ரீ ராம் லல்லாவின் (குழந்தை ராமன்) ஆலயம் ஒன்றை எழுப்புவது எந்த அளவுக்கு நியாயம், அவசியம் என்பதை எடுத்துக் கூறி அவர்களின் ஆதரவைத் திரட்டுவதில் முனைந்திருந்தேன். எனக்கு ஹிந்தி, உருது மொழிகளை மிகவும் சரளமாக மக்கள் பேசும் மொழியிலேயே பேசிப் பழக்கமாதலால் மக்களுடன் கலந்துறவாடுவது மிகவும் எளிதாகவே இருந்தது.

அதற்கு முன் முலாயம் சிங் முதலமைச்சராக இருந்தபொழுது அயோத்தியி்ன் எல்லைக்குள் கர சேவகர்களை உள்ளேயே நுழைய விடாமல் துப்பாக்கிச் சூடு நடத்திப் பல ஹிந்து இளைஞர்களும் சாதுக்களும் கொல்லப்பட்டிருந்ததால் அயோத்தி ஹிந்துக்களிடையே கோபாவேசம் இருந்தது. ஆனால் மிகவும் சிரமப்பட்டு அதனை அடக்கி வைத்திருந்தனர். முகமதியர் வட்டாரத்திலும் மாநில அரசு கர சேவகர்கள் மீது இத்தனை கடுமையாக நடந்துகொண்டிருக்க வேண்டாம் என்ற அதிருப்திதான் நிலவியது.

வெளியார் எவரும் அயோத்தி எல்லைக்குள் பிரவேசிக்கக் கூடாது என்ற் தடையுத்தரவு போடப்பட்டிருந்த அந்த இக்கட்டான சமயத்திலும் நான் அல்லோபதி மருந்துகள் த்யாரிக்கும் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியாக என்னை அடையாளம் காட்டிக்கொண்டு எளிதாக நகரின் உள்ளே பிரவேசித்துவிட்டேன். எனினும் ஊரில் மிகக் கடுமையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்ததால் ராம ஜன்ம பூமியில் ஸ்ரீ ராம் லல்லாவை தரிசிப்பதே பெரும்பாடாக இருந்தது. பூ, பழம், இனிப்பு என்று வாங்கிக்கொண்டு பரம பக்தனாக என்னைக் காண்பித்துக்கொண்டு மண்டபம் உள்ளே சென்றேன். வழக்கமாக வந்து பூஜை செய்துவிட்டுச் செல்லும் அர்ச்சகர்களுக்கு மட்டுமே அன்று உள்ளே செல்ல அனுமதி இருந்தது.

ஹனுமன் சாலிஸாவை ஆவேசத்துடன் உரக்க முழங்கிக் கொண்டு நான் மண்டபத்தை நோக்கிச் செல்லக் கண்டு ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.