peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

சினிமா’பரதேசி’ திரைப்படம்: ஒரு பார்வை

’பரதேசி’ தமிழ்த் திரை வரலாற்றில் வித்தியாசமான ஒருதிரைப்படம்.இது ஏதோ வழக்கமான அலங்காரத்துக்காகச் சொல்லப் பட்டதல்ல.1930-40களில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நரக வாழ்க்கையைக் காட்டும் படம்இது என்பதிலிருந்தேபுரிந்து கொள்ளலாம்.தென் தமிழக கிராமங்களில் இருந்து பஞ்சம்பிழைக்கச் சென்றவர்கள் வால்பாறை, மேகமலை போன்ற நீலகிரியின்தேயிலைத் தோட்டங்களில் மீள முடியாத கொத்தடிமைகளாக ஆகி, துயர வாழ்வில் உழல்வதைப் பற்றிப் பேசும் படம் இது. தமிழ்த் திரைப்படங்களில் வழக்கமாக வலம் வரும் மசாலாஅடிதடி காதல் கதைகளுக்கு மத்தியில் வரலாற்றின் ஒரு துயர அத்தியாயத்தை குறைந்த அளவு வணிக சமரசங்களுடன் திரையில் பதிவு செய்திருப்பது என்பதே ஒரு சாதனை. இந்த ஒரு விஷயத்திற்காகவே இயக்குனர் பாலாவையும் இந்தத் திரைப்படத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.பாலாவின் படங்கள் அனைத்தும் மானுட வாழ்வின் இருண்ட பக்கங்களையே சித்தரிப்பவை என்பது தெரிந்தது தான். பொதுவாக விளிம்பு நிலை மக்கள், மனப் பிறழ்வுகள், அதீத வன்முறை ஆகிய அம்சங்கள் அவற்றில் தவறாமல் இடம் பெறும். இந்தப் படத்திலும் அவற்றில் சில இருந்தாலும் அடிப்படையில் இது ச்பிக்கப் பட்ட மானுடர்களின் வலியைப் பேசும் திரைப்படம். பசியின் வலி. அடக்கு முறையின்வலி. வேர் பிடுங்கப்பட்டு ஊரைத் துறந்துபிழைப்பு தேடச் செல்வதன் வலி. அடிமைத் தனத்தின் ஊமை வலி. மானம் கொள்ளை போவதை உணர்ந்தும் வாழ்ந்திருப்பதன் வலி, ஆத்மா அறுவடை செய்யப் படுவதைமௌனமாக சகிப்பதன் வலி. மீண்டெழ எந்தத் திராணியும் அற்றுப் போய் மீண்டும் மீண்டும் சுரண்டப் படுவதன்வலி – இந்த வலிகள் தான் படம் முழுவதும் வியாபித்திருக்கின்றன.படத்தின் ஆரம்பத்தில் “Inspired by thenovel Red Tea” என்றுவருகிறது. 1940 முதல் 1960 வரையிலான காலகட்டங்களில் இந்தியாவின் தேயிலைத் தோட்டங்களில் சுகாதார அதிகாரியாகப் பணியாற்றிய பி.ஹெச்.டேனியல்தனது அனுபவங்கள் மற்றும் கேட்டறிந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதிய ஆங்கில நாவல் ‘ரெட் டீ’.தமிழில் ‘எரியும் பனிக்காடு’ (விடியல் பதிப்பகம்) என்ற பெயரில் இந்த நாவல் சமீபத்தில் மொழிபெயர்க்கப் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.