peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

வேதாளம் சொன்னபேரறிஞர் கதை

கழக அரசுகளை திரும்பத் திரும்பத் தன் தலையில் தானே போட்டுக்கொள்ளும் தமிழக மக்கள் போல, தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமன் வேதாளம் உறைந்த சவத்தை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு கீழிறங்கினான். வேதாளம் பேசத் துவங்கிற்று.“வீரம் மிகுந்த அரசனே! இது வரை பல கதைகள்சொல்லி விட்டேன். கதை முடிவில் நான் கேட்கும் கேள்விகளுக்கு நீயும் சரியாகப்  பதில் சொல்லிக் கொண்டே வருகிறாய். இம்முறை உனக்கு தமிழ் நாட்டின் மிகப் பெரிய ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்கிறேன் கேள். “ என்று ஆரம்பித்தது.அண்ணாதுரை என்று தலைவர் ஒருவர் தமிழ் நாட்டில் இருந்தார். ஆரம்பத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தஅவர் படித்து முடித்து 1935ல் ஜஸ்டிஸ் பார்ட்டி என்கிற கட்சியில் சேர்ந்தார். தனது பேச்சாற்றலால் தமக்கென அக்கட்சியில் ஆதரவாளர்களை உருவாக்கினார். கட்சியும்வளர்ந்து திராவிடர்கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது. அக்கட்சித் தலைவர் ஈவேராவுடன் கருத்து வேறுபாட்டில் வெளியேறி திராவிட முன்னேற்றக்கழகம் என்ற புதுக் கட்சி துவங்கினார்.  எதையும் தாங்கும் இதயம் கொண்ட மனிதராக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பலகாலம் நடத்தி இந்தி மொழியை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்தார். தென்னாட்டை தனி திராவிடநாடாக பிரிக்க வேண்டும் என்று மேடை தோறும் கொள்கை முழக்கம்செய்தார்.தொடர்ந்து பெரும் பேச்சாளராக வலம் வந்தஅவர், தமிழக முதல்வரும் ஆனார். அதுவரை மதராஸ் பிரசிடென்சி என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தார்.  அவர் மிகுந்த புத்திசாலியாக இருந்ததால் பேரறிஞர் அண்ணா என்றே நினைவு கூறப் படுகிறார். மேலும் அவர் பல வகையான நாவல்கள், நாடகங்கள், இலக்கிய புத்தகங்கள் எழுதி இருக்கிறார். திரைப்படங்களுக்கு வசனம் எழுதிஇருக்கிறார். அவர் எழுதிய பல கதைகள் படங்களாக வந்திருக்கின்றன. அமெரிக்காவில்உள்ள யேல் பல்கலைக்கழகம் கூட அவரது அறிவை மெச்சி பாராட்டிகௌரவ டாக்டர் பட்டம்வழங்கியது. அவரை தலைவராக ஏற்றுக் கொண்டலட்சோப லட்சம் தொண்டர்கள் இருந்தார்கள்.“கடமை கண்ணியம் கட்டுப்பாடு” ஆகிய நெறிகளை தன் வாழ்க்கையில்மேற்கொண்டு, தன் தொண்டர்களையும் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.