peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


ad
a---------------------------------tamil1.peperonity.net

பீஷ்ம பிதாமகருக்கு …

மிகவும் அசாதாரணமான ஒரு நிலையில் இதை எழுத துவங்குகிறேன் . இந்த தேசம் ஒரு அசந்தர்ப்பமான சூழலை சந்தித்து கொண்டிருக்கிறது. எதிரிகள் வெடி வெடித்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கயவர்களும், கம்யூனிஸ்ட் கயவர்களும் உங்களின் ஜன நாயக மாண்பின் பகுதிகளை தப்பும், தவறுமாகவும், மிகுந்த கயமைத்தனத்தோடும் பிரித்து பொருள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் . இந்த தேசத்தை அழிக்க வேண்டும் என நினைக்கும் பிரிவினைவாத சக்திகள், அயல் நாட்டு ஆதிக்க சக்திகள் மிகுந்த குயுக்தியோடு தங்களின் ஊடகங்களில் அவதூறை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன. இந்த பாரத தேசத்தின் மக்களிடையே அவ நம்பிக்கையையும் அச்சத்தையும் விதைப்பதற்காக பல்வேறு உத்திகளை உபயோகிக்கின்றன.
[2]
துரோக எண்ணம் கொண்ட சிலரும், கூட இருந்து குழி பறிக்கும் சிலரை நட்பாக தேர்ந்தெடுத்த சிலரும் நம் வெற்றியை பறிக்க திட்டம் இடுகிறார்கள். ஊடகங்கள் உங்களை பிரித்து மேய்கின்றன. பாஜகவின் மீது சேற்றை வாரி இறைக்கின்றன. அவதூறு செய்கிறார்கள் நம் சகோதர காவிப்படையை, நம் சொந்த கார்யகர்த்தாக்களை கேவலமாகவும், கீழ்த்தரமாகவும் மதிப்பீடு செய்து மலினப்படுத்துகிறார்கள். இதை எல்லாவற்றைவும் தாண்டி மக்கள் அதிர்ச்சியோடு பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இந்த தேசத்திற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பழுக்கற்ற பாரத புதல்வர்களுக்கிடையே கூட கருத்து வேறுபாடு இருக்குமா? என புரியாமல் குழம்புகிறார்கள். தேசத்தின் நலனை விட தனி நபர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கெல்லாம் என்ன முக்கியத்துவம் என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.
நேற்று வரை உங்களை காவி பயங்கரவாதி என்றும், கொலைகாரர் என்றும் வசை பாடிக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி இன்று உங்களை பற்றி கவலைப்படுவதாக நடிக்கிறார்கள். தீனதயாள் உபாத்யாயாவை கொலை செய்த காங்கிரஸ் கட்சி, சியாமா பிரசாத் முகர்ஜியை காஷ்மீரில் கொலை செய்த கயமைத்தனம் நிரம்பிய காங்கிரஸ் கட்சி நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இது எல்லாம் ஆடு நனைகிறதே என்று ஓநாய் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.