peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

தமிழ் அரசியலில் இளைஞர்களின் கடப்பாடு!

மஹிந்த ராஜபக்ஷ என்கிற சர்வாதிகாரத்துக்கு எதிராக வட மாகாண சபைத் தேர்தலிலும், ஜனாதிபதித் தேர்தலிலும் தீர்க்கமான முடிவுகளோடு செயற்பட்ட தமிழ் மக்கள், ஜனநாயக ரீதியிலான அரசியல் போராட்டங்களில் அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டிய தருணம் இது.
மஹிந்த ராஜபக்ஷவின் வீழ்ச்சியோடு அரசியல் ரீதியிலான போராட்டங்கள் முடிந்துவிட்டதாகவோ, புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வினை உடனடியாக தந்துவிடும் என்றோ கொள்ள முடியாது.
தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கக் கூடிய அரசியலை எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி தமிழ் மக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். இப்போது கிடைத்திருக்கின்ற ஜனநாயக இடைவெளியை குறிப்பாக, தமிழ் அரசியல் தலைமைகளும், கட்சிகளும், இளைஞர்களும் சரியாகக் கையாள வேண்டும்.
ஆயுதப் போராட்டங்களின் வீழ்ச்சிக்குப் பின்னரான சிறுகாலம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் வெறுமையை மாத்திரமே விட்டு வைத்திருந்தது.
ஆனால், மெல்ல நகர்ந்த காலம் யதார்த்தப் போராட்டக் களத்தை உணர வைத்தது. அதுதான், தமிழ் இளைஞர்கள் மத்தியில் போராட்ட குணம் இன்னமும் அதே ஆக்ரோசத்தோடு இருக்கின்றது என்பதையும் வெளிப்படுத்த வைத்தது.
வட மாகாண சபைத் தேர்தலும், ஜனாதிபதித் தேர்தலும் பெரும் அச்சுறுத்தலான ஆட்சிக் காலத்திலேயே நடைபெற்றது. ஆனாலும், அவ்வாறான காலங்களிலும் கூட தம்முடைய கருத்துக்களினூடு அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து அக்கறையோடு செயலாற்றினார்கள்.
இரண்டு தேர்தல்களிலும் தமிழ் மக்களின் பெரும் அர்ப்பணிப்பான வாக்களிப்பு என்பது இளைஞர்களின் குறிப்பிட்டளவான முயற்சியினாலேயே சாத்தியப்பட்டது.
தமிழ் அரசியல் உரிமைப் போராட்டங்களில் இளைஞர்களது பங்களிப்பு என்பது காலம் காலமாக பெரும் வகிபாகத்தைக் கொண்டது. அது, ஆயுத ரீதியிலான போராட்டங்களின் போக்கிலும் கோலொச்சிக் காணப்பட்டது. சில நம்பிக்கைகள், கொள்கைகள் பொய்த்துப் போனாலும் கூட புதிய நம்பிக்கைகளைக் கொள்வதும், உரிமைகளை இழந்துவிடாது தக்க வைப்பதற்காக ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.