peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

ஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்

சென்னை ஐஐடி(IIT)யில் உள்ள அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் (Ambedkar Periyar Study Circle (APSC)) ஐஐடி நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டது. தற்போது அதுவே இந்தியா முழுவதும் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது. ஐஐடி முன்பு (30-5-2015) போராட்டம், ஆர்ப்பாட்டம், கைது என்று ஒரே களேபரமாக நடந்து கொண்டிருந்தது. எல்லாத் தொலைக்காட்சிகளிலும் இதுவே விவாதப் பொருளாகி இருக்கிறது. 20 அல்லது 30பேர் சேர்ந்து நடத்துகிற ஒரு சிறிய அமைப்புக்கு எப்படி இந்த அளவுக்கு பல கட்சிகள் ஆதரவும், பல ஊடகங்கள் ஆதரவும் பெறப்பட்டன? இந்த எண்ணம் எனக்கு ஏற்பட்டிருக்காது. ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடர்ந்து இந்த அமைப்புக்கு ஆதரவாகக் கையாண்ட விதம்தான் என்னை யோசிக்க வைத்தது. ஒரு அமைப்புக்கு கண்மூடித்தனமாக புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆதரவுத் தெரிவிக்கிறது என்று சொன்னால் அந்த அமைப்பு கண்டிப்பாக இந்துமதத்திற்கு எதிராக வேலை செய்கிறது என்று அர்த்தம் என்று பலபேரிடம் பேசியபோது எனக்குத் தெளிவாகியது.
சில மாணவர்களால் ஒன்று சேர்ந்து 14-4-2014 அன்று இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஈவெராவுக்கு பெருமை சேர்க்கிற பெரியார் என்ற பெயரை தேர்ந்தெடுத்த இந்த அமைப்பு அண்ணல் அம்பேத்கரை மட்டும் வெறும் அம்பேத்கராகவே குறிப்பிட்டிருப்பதன் உள்அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அண்ணல் அம்பேத்கரை குறிப்பிடும் எவருமே – அவரை உள்வாங்கிக் கொண்ட எவருமே – அவரை மதிக்கிற எவருமே – அவரை கொண்டாடுகிற எவருமே – அவரை ஏற்றுக் கொண்ட எவருமே அவரை வெறும் அம்பேத்கர் என்ற பெயரோடு என்றுமே அழைத்ததில்லை. ஒரு அடைமொழியோடுதான் அழைப்பார்கள்; பெயர் வைப்பார்கள். அண்ணல் அம்பேத்கர் என்றோ, புரட்சியாளர் அம்பேத்கர் என்றோ, டாக்டர் அம்பேத்கர் என்றோ, பாபாசாகேப் அம்பேத்கர் என்றோதான் பெயரை வைப்பார்கள். ஆனால் இவர்கள் வெறும் அம்பேத்கர் என்று பெயர் வைத்ததன் மூலம் நாங்கள் அரசியல் செய்யவே அவரை பயன்படுத்தியிருக்கிறோமே தவிர கொண்டாடுவதற்காக அல்ல, அவரின் கொள்கைகளைப் பின்பற்றுவதற்காக அல்ல என்பதை புரிய வைத்திருக்கிறார்கள். ஒரு தற்காப்புக்காகவே அண்ணல் அம்பேத்கரின் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.