peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் – 2

போதைப்பொருள்கள் கடத்துவதுமூலமாகக் கிடைத்தது போலவே, பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்லாமியத் தொண்டுநிறுவனங்கள் மூலமாகக் கிடைக்கும் நன்கொடைகள், இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்களுக்குப் பயன்படுவதாகவும் தெரியவருகிறது. உலகிலேயே முதன்முதலில் உருவாகிய தொண்டுநிறுவனங்கள் உலக முஸ்லீம் லீக் (Muslim World League), மற்றும் ரபிதா அல்-ஆலம் அல்-இஸ்லாமி (Rabita al-Alam al-Islami) என்பவை.
இதையடுத்து, 1978-ல் சவுதி அரேபிய அரசு உலக இஸ்லாமிய நிவாரண அமைப்பு (International Islamic Relief Organization) என்ற ஒன்றைத் துவக்கியது. இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கமான அல்கெயிதாவிற்கு, இஸ்லாமியத் தொண்டுநிறுவனங்கள் வழங்கும் நிதியிலிருந்து ஒரு பகுதியை அல்காயிதாவனது பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் வழங்கிறது பாகிஸ்தானில் இருக்கின்ற ஜமாத்-உத்-தாவா என்று அமைப்பின் மூலமாகவும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைக்கிறது.
பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதிவழங்குவதற்காகவே, இருபதுக்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தொண்டுநிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் அமெரிக்காவிலிருந்து செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை நான்கு, இங்கிலாந்து நாட்டிலிருந்து செயல்படும் தொண்டுநிறுவனங்கள் ஆறு, மற்றும் சவுதி அரேபியா, சூடான், குவைத், ஈரான், கனடா போன்ற நாடுகளிலிருந்து பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி அளிக்கின்ற தொண்டுநிறுவனங்களும் அடங்குகின்றன.
அமெரிக்காவிலிருந்து செயல்படும் இஸ்லாமியத் தொண்டுநிறுவனங்களில் இஸ்லாமிய நிவாரணம் (Islamic Relief), முஸ்லீம் உதவி, (Muslim Aid), முஸ்லீம் கைகள்(Muslims Hands), நிவாரணம் மற்றும் வளர்ச்சிக்கு உதவும் கரங்கள் (Helping Hand for Relief and Development) போன்ற நிறுவனங்கள் மிகவும் முக்கியமானவை.
ஏழை இஸ்லாமியர்களுக்கு உதவிவழங்குவதற்கும், பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்கும் கனடாவில் நிதிதிரட்டப்பட்டது. திரடப்பட்ட நிதியானது, எந்த நோக்கத்திற்காக திரடப்பட்டதோ அதற்குச் செலவிடாமல், காஷ்மீரில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஹிஸ்புல் முஜாஹூதின் என்ற பயங்கரவாத அமைப்பிற்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.