peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

திப்பு சுல்தானின் மதவெறிச் செயல்பாடுகள்


“திப்பு சுல்தான் அவரது ராஜ்யத்தை 1782 டிசம்பர் 7 முதல் 1799 மே 4 வரை பதினாறரை ஆண்டுகள் ஆண்டார். அவரது ராஜ்யத்துக்குட்பட்டிருந்த மலபார் பகுதிகள் எட்டு ஆண்டுகள் மட்டுமே அவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அப்போதைய சாமர்த்தியமுள்ள அமைச்சராக இருந்த பூர்ணையா என்பவரின் உதவியும் ஒத்துழைப்பும் இல்லாமல் இருந்திருந்தால் கேரளாவிலும் கர்நாடகாவிலும் இப்போது இருப்பது போல முகமதியர்கள் இந்த அளவுக்கு இருந்திருக்க மாட்டார்கள். இந்துக்களும் தொகையில் குறைந்தும் வறுமையில் உழன்றும் இருந்திருக்க மாட்டார்கள்.
பூர்ணையா எனும் பிரதம அமைச்சரது மதியூகத்தால் 90,000 சிப்பாய்களையும், மூன்று கோடி ரூபாய் பணமும், விலை மதிப்பு சொல்லமுடியாத அளவு நகைகள், தங்கம், நவரத்தினங்கள் இவைகளைப் பெற்றுக் கொண்ட திப்புவுக்கு தான் தென்னிந்தியாவின் ஏகசக்ராதிபதியாக ஆகிவிடவேண்டுமென்கிற சபலம் உண்டாகியது. தன்னுடைய இந்த குறிக்கோளை அடைவதில் அப்போது தென்னிந்தியாவில் இருந்த ராஜாக்கள் குறிப்பாக மராத்தி, கூர்க், திருவாங்கூர் ஆகியவர்களோ அல்லது முஸ்லிம் மன்னரான நிஜாமோ தடையாக இருக்க மாட்டார்கள் என்பதை திப்பு உணர்ந்திருந்தார். தனக்கு இடையூறாக இருக்கக் கூடியவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் மட்டுமே என்ற பயம் அவருக்கு இருந்தது. அவர்களை மட்டும் இந்த மண்ணிலிருந்து விரட்டிவிட்டால் தான் தென்னிந்தியாவின் ஏகசக்ராதிபதியாகிவிட முடியும் என்று கணக்கு போட்டார். தன்னுடைய சுயநலம் காரணமாக பிரிட்டிஷ்காரர்களை திப்பு எதிர்த்த நிகழ்ச்சியை மதசார்பற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வரலாற்று ஆசிரியர்களும், முற்போக்கு எழுத்தாளர்களும் திப்புவை ஒரு சுதேச தேசபக்த வீரனாகப் படம் வரையத் தலைப்பட்டனர்.
அன்னிய நாட்டினரை எதிர்ப்பது என்பது தேசபக்தியினால் மட்டும் ஏற்படுவதல்ல. தன்னுடைய சுயநல நோக்கங்களுக்காக தன்னை அசைக்கமுடியாத அரச பதவியில் அமர்த்திக் கொள்வதற்காக, தனக்கு இடையூறாக இருந்த பிரிட்டிஷாரைத் துரத்திவிட இந்த புண்ணிய பூமியை ஆக்கிரமித்திருந்த மற்றொரு வெளிநாட்டாரான பிரெஞ்சுக்காரர்களைத் தன்னக்கட்டிக் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.