peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a---------------------------------tamil1.peperonity.net

நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன்

ஆம். நானொரு ஹிந்து என்பதில் மிக மிகப் பெருமிதம் கொள்கிறேன். பெருமிதம் கொள்வதை விட, நான் ஒரு ஹிந்துவாகப் பிறந்ததில் மிக மிக, மிகுந்த அதிர்ஷ்டசாலி என நினைக்கிறேன்.
நான் ஏன் அவ்வாறு உணரக் கூடாது? கோடி ரூபாயை ஒரு அதிர்ஷ்டப் போட்டியில் ஜெயித்தால் மக்கள் எப்படி பித்துப் பிடித்துப் போவார்கள் மகிழ்ச்சியில்? அவ்வாறிருக்கையில் இப்படி பலப் பல அதிர்ஷ்டப் பரிசுகளைக் காட்டிலும் மிகவுயர்ந்த ஒரு பரிசினைப் பெற்ற நான் பின் ஏன் அவ்வாறு மகிழக் கூடாது? “அவன்” என்னை ஒரு ஹிந்துவாகப் பிறப்பித்து இருக்கையில் எனக்கு அவனிடம் கேட்பதற்கு வேறெதுவும் இல்லை. இந்த மாபெரும் நன்றிக்கடனுக்கு செய்மாறு செய்வதே இனி என் பணி. ஹிந்துத்துவம் எனது மிகப்பெரும் பொக்கிஷமாகும்.
ஓ! என்னைத் தவறாக எண்ணிவிட வேண்டாம். எனக்குப் பிற மதங்களின் பால் எந்தவொரு வெறுப்போ காழ்ப்புணர்ச்சியோ இல்லை, இல்லவே இல்லை. மாறாக, நான் அவற்றை முழுமையாக மதிக்கிறேன். ஒரு தனிமனிதன் எந்தவொரு மதத்தினையும் இவ்வுலகிலோ பிறவுலகிலோ யார் என்ன சொல்வார்களோ, செய்வார்களோ என்றெல்லாம் கவலையுறாமல் பின்பற்றக்கூடிய சுதந்திரத்தை நான் மிக மதிக்கிறேன். மேலும், நான் மனிதனின் இத்தகைய சுதந்திரத்தைப் பேணுவதற்கு உறுதுணையாகவும் இருப்பேன். இது, இந்த ஹிந்து மதத்தின் தலையாயக் கோட்பாடு தான் நான் ஒரு ஹிந்துவாக இருப்பதில் மிகப் பெருமிதம் கொள்ள வைக்கிறது.
அனைத்து தத்துவங்களும், மதக்கோட்பாடுகளும் மிக நல்லவைகளை தன்னகத்தே கொண்டுள்ளன என்பதை மறுபபதற்கில்லை. ஹிந்துமதம் உங்களுக்கு ஏன் மிகச் சிறந்ததாக இருக்கும் என்றும் நான் விவாதிக்க முற்பட மாட்டேன். அது உங்கள் தனிப்பட்ட தேர்வு. நான் இங்கே சொல்ல விழைவதெல்லாம் எனக்கு ஹிந்துமதம் ஏன் ஒரு தனிப்பட்ட விருப்பமாயிருக்கிறது என்பதைப் பற்றியே.
ஹிந்துமதம் (அல்லது) சனாதன தர்மம் என்பது ஒரு வாழ்வியல் முறை, தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப்பெருமை கொண்டது. நான் ஒரு ஆயிரம் முறை இறக்க நேரிட்டாலும், நான் மறுபடி ஒரு ஹிந்துவாகப் பிறப்பதையே மிகவும் விரும்புவேன். என்னை ஒராயிரம் முறை மதமாற்றம் செய்யும்படி சாவைக் காட்டி பயமுறுத்தினாலும் ஹிந்துமதத்தை ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.