peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a---------------------------------tamil1.peperonity.net

மாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…

[1]தேசம்எதிர்பார்த்துக் காத்திருந்த மகத்தான மாற்றம் நிகழ்ந்துவிட்டது.
பாரதத்தின் பிரதமராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியே இருக்க வேண்டும் என்று நாட்டுமக்கள் தீர்மானித்துவிட்டனர்.
வாராதுவந்த மாமணியாக, வளர்ச்சியின் நாயகனாக தேசம் முழுவதும் திக்விஜயம் செய்த மோடியின் கடும் உழைப்புக்கும் அவரைத் தலைமையாகக் கொண்டு இயங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அற்புதமான பரிசாக, யாரும் எதிர்பாராத மாபெரும் வெற்றி கைகூடி இருக்கிறது.
இந்தியாவின் வரலாறு திருத்தி எழுதப்படும் இனிய தருணம் இது…
16வது நாடாளுமன்றத் தேர்தல் 9 கட்டங்களாக நடந்துமுடிந்து, தேர்தல் எண்ணப்பட்ட ஏப்ரல் 26ம் தேதியை இன்னமும் நீண்ட நாட்களுக்கு பாரதம் நினைவில் வைத்திருக்கும். ஏனெனில், இதுவரையிலான சுயநலமே பிரதானமான பிரித்தாளும் சூழ்ச்சி அரசியலுக்கு மாற்றாக, வளர்ச்சியை முன்னிறுத்திய எளிய குடும்பத்தைச் சார்ந்த ஒருவரை - தனது வாழ்வையே நாட்டுநலனுக்காக அர்ப்பணித்தவரை- தேசம் முழுவதும் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடிய நாள் அது.
இந்திய அரசியலில் சுயநல காங்கிரஸுக்கு எதிரான ஹிந்துத்துவ இயக்கங்களின் பன்னெடுங்காலத் தொடர் போராட்டத்திற்கு மக்கள் அளித்துள்ள ஆகச் சிறந்த பரிசாகவே இத்தேர்தல் முடிவைக் கொள்ளலாம்.
சங்கத்தில் புடம்போடப்பட்ட ஸ்வயம்சேவகரான மோடி, இதுவரை காங்கிரஸ் அல்லாத எவரும் பெறாத அறுதிப் பெரும்பான்மையுடன் நாட்டின் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு வித்திட்ட, முகம் தெரியாத கோடிக்கணக்கான செயல்வீரர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றி.
மற்றொரு நரேந்திரனின் தலைமையில், முன்னொரு நரேந்திரன் காட்டிய வழியில் நாடு மகோன்னத நிலையை நோக்கிப் பயணிக்கத் தயாராகிவிட்டது.
இறைவனுக்கு நன்றி!
[2]
திருப்புமுனை முடிவுகள்:
இதுவரையில் இருந்த இந்தியா வேறு; இனிவரும் இந்தியா வேறு என்பதற்கு கட்டியம் கூறியுள்ள தேர்தல் இது. இத்தேர்தலின் முடிவுகளை சுருக்கமாக இவ்வாறு வகைப்படுத்தலாம்:
1. காங்கிரசுக்கு மாற்றான பாரதிய ஜனதா கட்சி இதுவரை காணாத மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. அடல் பிகாரி வாஜ்பாய்- ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.