peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a---------------------------------tamil1.peperonity.net

புதிய பாரதம் மலர்கிறது

ஜனநாயகம் வென்றது. மக்கள் சக்தி வென்றது.
நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க 284 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையுடன் நிலையான ஆட்சி அமைக்கும் வகையில் வரலாறு காணாத வெற்றி அடைந்துள்ளது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 338 இடங்களை வென்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 44 இடங்களைப் பெற்று அதன் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. தேசிய நாயகர் நரேந்திர மோதியை இந்திய மக்களில் மிகப் பெரும்பான்மையினர் தங்கள் பிரதமராக அங்கீகரித்து தேர்வு செய்திருக்கிறார்கள். வதோதரா தொகுதியில் 5 லட்சத்துக்கும் அதிகமாகவும், வாராணசியில் 3 லட்சத்துக்கும் அதிகமாகவும் வாக்குகள் பெற்று மோதி பெரும் வெற்றியடைந்திருப்பது மக்கள் அவர் மீது வைத்துள்ள தனிப்பட்ட நம்பிக்கையையும் அன்பையும் பறைசாற்றுகிறது.
வடக்கே லடாக்கிலும், மேற்கே கட்சிலும், கிழக்கே அருணாசல பிரதேசத்திலும், தெற்கே கன்னியாகுமரியிலும் என்று நான்கு எல்லைப் புறத் தொகுதிகளிலும் பாஜக வென்றிருக்கிறது. மகா சக்தியான பாரத அன்னையின் பரிபூரண ஆசியே மக்களின் வாக்குகளாக மோதி அரசுக்கு உரம் சேர்க்கும் வகையில் அமைந்து விட்டிருக்கிறது. சில குறிப்பிட்ட சமுதாய மக்கள் முழுவதுமாக மோதிக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று ஹேஷ்யம் கூறிய அரசியல் பண்டிதர்களின் கருத்துகளைத் தவிடு பொடியாக்கி, முஸ்லிம்கள், தலித்கள், வனவாசிகள், நகர்ப்புற மக்கள், கிராமவாசிகள் என வெவ்வேறு தரப்பினரும் அதிகமாக வாழும் எல்லாவிதமான தொகுதிகளையும் தழுவியதாக பாஜகவின் வெற்றி அமைந்திருக்கிறது.
[1]
தமிழகத்தில் பாஜக கூட்டணி ஒரு பரிசோதனை முயற்சியாக அமைந்தது. கணிசமான வாக்குகளைப் பெற்ற போதும், இடங்களை வெல்லும் அளவுக்கு இந்தக் கூட்டணி உந்து சக்தியை அடையவில்லை என்பது வருத்தமே. அதற்கு நடுவிலும் கன்னியாகுமரியில் தமிழக பாஜக தலைவர் பொன்.ஆர் அவர்களின் சிறப்பான வெற்றியும், தருமபுரியில் பாமக வெற்றியும் சிறு சந்தோஷங்கள். அதிமுகவின் 37 தொகுதி வெற்றி, “தேசிய” காங்கிரசுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய கட்சியாக அதிமுகவை முன்னணியில் கொண்டு வந்து ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.