peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a---------------------------------tamil1.peperonity.net

சாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து சான்றோர்கள

நீபிராமணன் உள்ளிட்ட எந்த வர்ணத்தையும் சேர்ந்தவன் இல்லை. அனைத்தையும் சாட்சியாய் அறியும் விழிப்பு நிலையே நீ என்று அறிவாயாக. –அஷ்டவக்ர சம்ஹிதை
அர்ஜுனன் சொல்கிறான்: என் உறவினரான துரியோதனர்களைக் கொன்றால் அந்தக் குலம் அழியும். குலம் அழிந்தால், அவர்கள் பின்பற்றும் குல தர்மம் அழியும். குல தர்மம் அழிந்தால் ஒரு குலத்துப் பெண்கள் மற்ற குலத்து ஆண்களோடு சம்பந்தம் கொள்வார். சாதிக் கலப்பால் தர்மம் அழிந்து போகும். குல தர்மத்தை அழித்தவர்களுக்கு நரகமே கிட்டும்.
கிருஷ்ணன் சொல்கிறான்: அழியும் உடல்களால் உருவாகுபவை பற்றுதல்களே; அன்றி, கடமைகள் அல்ல. அவை ஆத்மாவை அறியச் செய்யாது. ஆத்மாவை அறிந்து செயல்படுவதே தர்மம். மற்ற எதுவும் தர்மம் இல்லை.
தனிமனிதரின் குணம் மற்றும் செயல் – என்ற இந்த இரண்டின் மூலமாகவே வர்ண ஆசிரமம் உண்டாகிறது (பிறப்பால் இல்லை).
ஒருவரின் குணம் மற்றும் செயல்களால் உருவாகும் அந்த சுயதர்மத்தைப் பின்பற்றுவதுதான் அவரவர் கடமை. அனைத்து வகை தர்மங்களிலும் சிறந்தது சுயதர்மம் மட்டுமே. சுயதர்மத்தின்படி மட்டுமே நீ செயல்படு. சுயதர்மப்படி செயல்படாமல் இருப்பதுதான் பாவம். -பகவத் கீதை
பிராமணர் உள்ளிட்ட அனைத்துச் சாதிகளிலும், சாதிக் கலப்புத் திருமணம் குறித்துக் கடுமையான விதிகள் இருக்கின்றன. இருந்தாலும், சாஸ்திர சம்மதத்தோடோ அல்லது ரகசியமாகவோ உடல் உறவுகள் பல தலைமுறைகளாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
சாதி இணக்கத் திருமணத்தை மிகக் கடுமையாகத் தடை செய்தாலும், எதிர்காலத்திலும் சாதி கடந்த உடல் உறவுகள் இருக்கத்தான் செய்யும். அதனால், ஒரு பார்ப்பனரின் மகன், பிராமணருக்கே உரிய உள்ளார்ந்த தகுதிகள் உள்ளவனாகவும், சத்திரியர் ஒருவரின் மகன் சத்திரியனுக்கே உரிய தகுதிகள் நிறைந்தும் இருப்பான் எனும் அந்த முழு நம்பிக்கையுமே ஒழிக்கப்பட வேண்டும்.
நம் அனைவரின் சாதிகளிலும் கலப்பு உறவுகள் நினைவுக்கு எட்டாத காலத்தில் இருந்து பல தலைமுறைகளாகத் தொடர்ந்து நடந்து வருவதால், எந்த ஒரு குறிப்பிட்ட சாதியும் ஒரு குறிப்பிட்ட தகைமைக்கு ஏகபோக உரிமை கொண்டாட முடியாது. –வீர ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.