peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a---------------------------------tamil1.peperonity.net

ஈழத்து வன்னிச் சிவாலயங்கள்

இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கும் பழம்பெரும் நகரான அனுராதபுரத்திற்கும் இடையே விரிந்து கிடக்கும் நிலப்பரப்பை வன்னி என்று குறிப்பிடுவர். இது மேற்கே மன்னாரையும் கிழக்கே திருகோணமலையையும் எல்லையாகக் கொண்டது. இவ்விரு எல்லைகளிலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகிய திருத்தலங்கள் முறையே அமைவு பெற்றுள்ளன. இந்த வன்னிப்பகுதி சுமார் 3000 சதுரமைல்கள் கொண்ட நிலப்பரப்பாகும்.
இதில் கிழக்கெல்லையான திருகோணமலையில் கோணேசருக்கு திருக்கோயில் எழுப்பிய குளக்கோட்டன் என்ற அரசன் அக்கோயிலையும் அதன் சொத்துக்களையும் பராமரிக்க தமிழகத்தின் பாண்டிய நாட்டிலிருந்து வரவழைத்தவர்களே வன்னியர்கள் ஆவர். இதே போல அவ்வப்போது நிகழ்ந்த சோழப்படையெடுப்புக்களின் போது வந்த படைவீரர்களும் இவ்வகுப்பினுள் சார்ந்தனர். இவ்வாறு வன்னியர்கள் குடியேறிய பகுதியே வன்னி எனப்படுகிறது.
இவ்வாறு வன்னியர்கள் வாழ்ந்த பெருநிலப்பரப்பான வன்னியில் பல சிவாலயங்கள் அமைவு பெற்றிருந்ததாக தொல்லியல்சான்றுகள், இலக்கிய சான்றுகள், வரலாற்றுக்குறிப்புகள் கிடைக்கின்றன.
[1]திருக்கேதீஸ்வரம்
ஆதியில் நவக்கிரஹதேவர்களுள் ஒருவரான கேது பகவான் பூஜித்த ஸ்தலமாகச் சொல்லப்பெறும் கேதீஸ்வரம் வன்னியர்களின் வருகைக்கு முன்னரே சிறப்புற்றிருந்த திருத்தலமாகும்.
இலங்கையின் ஆதிகுடியான நாகர்களால் வழிபாடாற்றப்பெற்ற இத்தலம் திருஞானசம்பந்தராலும் சுந்தரமூர்த்தி சுவாமிகளாலும் தேவாரத்திருப்பதிகங்களால் போற்றப்பெற்ற சிவாலயமாகும்.
இங்கே பாலாவிக்கரையில் கௌரியம்மையுடன் காட்சி தரும் கேதீஸ்வரப்பெருமானை
அங்கம் மொழி அன்னாரவர் அமரர் தொழுதேத்த
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகரில்
பங்கஞ்செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேல்
செங்கணர வசைத்தான் திருக்கேதீச்சரத்தானே
என்று சுந்தரர் போற்றுகிறார்.
இதில் ‘வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகர்’ என்று சொல்வதால் அக்காலத்தில் கேதீஸ்வரக் கடலோரம் மிகவும் செல்வச்செழிப்பும், சீரும் பொலிவும் கொண்டதாகவும், மாநகராயும் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.