peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a---------------------------------tamil1.peperonity.net

தலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…

இந்து அண்மையில் பாரதிய வம்சாவளி ‘ரோமா’ சமுதாயத்தினர் மேற்கத்திய நாடுகளில் படும் இன்னல்கள் குறித்து எழுதிய உடனேயே
சில இஸ்லாமிய சகோதரர்கள் வந்து மேற்கத்திய நாடுகளுக்கு வக்காலத்து வாங்கும் விதமாக ‘தலித்துகள் இந்தியாவில் இன்னல்கள் அனுபவிக்கவில்லையா?’ என கேட்டிருக்கிறார்கள். ஏதோ சாதியமும் சமுதாயக் கொடுமைகளும் இந்து சமுதாயத்துக்கு மட்டுமே உரியது என்பது போலவும், இஸ்லாம் ஏதோ சமூக விடுதலை சித்தாந்தம் என சித்தரிப்பது நோக்கம். ஆனால் இஸ்லாத்தை விட சமூக அநீதிகளை மூடி மறைத்து சமத்துவ வேடம் போடும் சமுதாயம் வேறொன்று கிடையாது. இதை இந்த கட்டுரையை எழுதுபவன் சொல்லவில்லை. போதிசத்வ அம்பேத்கர் கூறுகிறார்:
இந்து சமுதாயத்தில் உள்ள சமூக தீமைகள் அனைவருக்கும் தெரியும். காதரின்
மேயோவின் மதர் இந்தியா இந்து சமுதாயத்தில் உள்ள சமூக தீமைகளை வெளிக்காட்டிய அதே நேரத்தில் ஏதோ இஸ்லாமிய சமுதாயம் முற்போக்கானது எனும் எண்ணத்தை உருவாக்கியது. இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தை அருகாமையிலிருந்து பார்த்த எவருக்கும் அது அதிசயத்தை அளிக்கும். இந்துக்களிடம் இருக்கும் எந்த சமூக தீமை இஸ்லாமியர்களிடம் இல்லை என கேட்கலாம்.
பாபா சாகேப் மேலும் தெளிவாக சொல்கிறார்:இஸ்லாமிய சமுதாயம் ஹிந்து சமுதாயத்தைக் காட்டிலும் சமூக தீமைகள் நிரம்பியது.
ஒருவேளை பாகிஸ்தான் உருவாகி இஸ்லாமியர்களுக்கு என்று தனி தேசம் ஏற்பட்டால் நிலை சரியாகிவிடுமா? என நினைத்தால் அதுவும் இல்லை. நவம்பர் -15-2003 இல் ’எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’
இதழில் இர்ஃபான் அகமது என்பவர் எழுதிய கட்டுரை விஷயங்கள் மிக மோசமாகவே உள்ளன என்பதை காட்டுகின்றன. அவர் சொல்கிறார்:
இஸ்லாமிய பாகிஸ்தானில் இந்த ‘இந்து’ தன்மையான சாதி இருக்காது என நினைக்கலாம். ஆனால்
உண்மை என்னவென்றால் சாதி பாகிஸ்தானில் இந்தியாவில் இருப்பதைவிட தீர்க்கமாக இருக்கிறது.
ஒரு தெளிவான வரலாற்று ஆதாரத்தையே நாம் சொல்லலாம். பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் நினைவுதினம் நேற்று. பாபு ஜெகஜீவன் ராமை பனாரஸ் இந்து கல்லூரியில் இணைந்து படிக்க சொன்னார் மதன் மோகன் மாளவியா. இத்தனைக்கும் மாளவியா ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.