peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a---------------------------------tamil1.peperonity.net

தாமிரபரணி முதல் பரமகுடி வரை…

23-07-1999 இல் திருநெல்வேலி மாநகரில் தலித் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஊர்வலத்தில் காவல்துறை நடத்திய தடியடியும் அதன் விளைவாக 17 பேர் பலியானதும் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத சோக நினைவுகள். அன்றைய செய்தி தாள்களில் வெளியான கொடுமையான படங்கள் என்றும்
நம் மனசாட்சியை உலுக்கி கேள்வியை எழுப்பிக் கொண்டிருப்பவை. ஊர்வலம் சென்றவர்களின் நடத்தையே இந்த தடியடிக்கும் படுகொலைக்கும் காரணமானது என ஒரு வாதம் அப்போது பரவலாக வைக்கப்பட்டது. அன்று நடத்தப்பட்டது சாதி ஊர்வலமோ அல்லது ஒரு சாதி தான் ஆண்ட சாதி என பெருமையடித்துக் கொண்ட ஊர்வலமோ அல்ல. எந்த ஒரு ஆதிக்க சாதி ஊர்வலத்தைப் போல (தேவர், வன்னியர் … என எந்த சாதியையும் அதில் போட்டுக் கொள்ளுங்கள்) இங்கு நடத்தையோ கோஷங்களோ மோசமாக இருந்திட வாய்ப்பில்லை. என்றாலும் தலித்துகள் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டனர். தாமிரபரணி நதிக்குள் பெண்கள் கரையேறத் தவிப்பதையும் அவர்களை காவலர்கள் லத்தியால் அடித்து உள்ளே தள்ளுவதையும் அன்றைய செய்தி தாள்கள் வெளியிட்டிருந்தன. தமிழக காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் சின்னங்களாக அவை என்றென்றும் அமைகின்றன. இதனையொட்டி அண்மைக்கால சோக நிகழ்வையும் மறந்திட முடியாது. செப்டம்பர் 11 2011 இல் நடந்த பரமக்குடி படுகொலை. அதிலும் ஏழு தலித்துகள் கொல்லப்பட்டனர். போலீஸ் துப்பாக்கிச் சூடு.
இது ஏன் என்பதை சிந்திக்க வேண்டும். தலித் சமுதாயத்தினரின் ஊர்வலத்துக்கும் பிற சாதிய ஊர்வலங்களுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உள்ளது. பல நூற்றாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்ட சமுதாயம்.
அது இன்று தன் உரிமைகளை கோருகிறது. அப்போது அந்த ஊர்வலங்களில் உணர்ச்சி வேகம் இருப்பது இயல்பானது இயற்கையானது. அவர்கள் தம்மை ஆண்ட பரம்பரையினர் என சொல்லவில்லை. அன்று திருநெல்வேலியில் ஊர்வலம் சென்றவர்கள் எவரும் தம்மை ‘ஆண்ட பரம்பரை’ என்று பேசவோ ‘மீண்டும் ஆளுவோம்’ என்று சவால் விடவோ இல்லை. அவர்கள் கேட்டது தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு. அதற்கு கொடுக்கப்பட்ட பரிசு படுகொலை. அன்றைய திமுக அரசு பின்னர் விசாரணை கமிஷன் என்கிற வழக்கமான சம்பிரதாயத்தை நடத்தியது. பதினோரு மாதங்கள் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.