peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a---------------------------------tamil1.peperonity.net

முடிவு புதிய விடியலைத் தருமா?

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் ஜனநாயகத்தின் சிறப்பை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி இருக்கிறது. அசைக்க முடியாத அதிபராகக் காட்சியளித்த ராஜபட்சவை, மிகவும் அமைதியான முறையில் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள் அந்நாட்டு மக்கள். அவர்களது தெளிவான அரசியல் பார்வைக்கு முதலில் வந்தனம் செய்ய வேண்டும்.
இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத் தேர்தல் அமைப்புடன் ஒப்பிடுகையில் இலங்கை மிகவும் சிறியது. அதன் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையே 1.54 கோடி தான். தமிழகத்தின் மாநில சட்டசபைத் தேர்தலுடன் கூட அதனை ஒப்பிட முடியாது. ஆனால், இந்தியாவில் உள்ள அரசியல் விவகாரங்களைவிட அங்கு பிரச்னைகள் அதிகம்.
தொடர்ந்த உள்நாட்டுப் போர்கள், வலதுசாரி தீவிரவாதம், அரசியல் கட்சிகளின் பக்குவமின்மை போன்ற சிக்கல்களால் அங்கு நிலையான அரசியல் அதிகாரமோ, அமைதியான ஆட்சியோ நீண்ட நாட்கள் நிலைக்காமலே இருந்துவந்தது. இந்த வெற்றிடத்தையே மஹிந்த ராஜபட்ச மிக எளிதாக தனது ஆளுமையாலும், குடும்ப அரசியலாலும் நிரப்பினார்.
ஆயினும், தனது எதேச்சதிகாரத்தாலும், அதிகார மமதையாலும், அளவுக்கு மீறிய குடும்ப அரசியலாலும் மக்களின் வெறுப்புக்கு உள்ளானார் ராஜபட்ச. விடுதலைப் புலிகளை வீழ்த்தி இலங்கையின் கதாநாயகன் அந்தஸ்தைப் பெற்ற அவரால் அதை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.
இலங்கை உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட லட்சக் கணக்கான தமிழர்களின் ஆத்மாக்களிடம் இருந்து கிடைத்த சாபம் தானோ, அவரது நெருங்கிய சகாக்களே அவரை விட்டுப் பிரிந்தனர்? அதன் விளைவாக 2010-இல் அமோக வெற்றி பெற்ற ராஜபட்ச இத்தேர்தலில், தனது அமைச்சரவையில் இருந்த சகாவாலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.
இந்தத் தேர்தலின் முடிவுகளை அலசும் முன் இலங்கையின் நெடிய அரசியல் பின்புலத்தையும், அங்குள்ள அரசியல் கட்சிகளின் நிலவரத்தையும், அங்கு தொடரும் இனக்குழு சிக்கல்களையும் ஓரளவேனும் புரிந்துகொள்வது பயன்படும்.
அதிகாரச் சமண்பாடுகள்:
அப்பாவி தமிழ் மக்களின் சாபம் சும்மா விடுமா?
இந்தியாவைப் போலவே இலங்கையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் தான் இருந்தது. 1948-...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.