peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a---------------------------------tamil1.peperonity.net

இலங்கைத் தமிழர்
வளரும் பாரதத்தின் உலக மேலாண்மை

இந்தியஅரசில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பிரதிபலிப்பு கடல் கடந்தும் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. முந்தைய அரசுகள் போலல்லாது, இந்தியாவின் வல்லமையை உலகிற்கு உணர்த்துவதும், உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிப்பதும் பிரதான நோக்கமாகக் கொண்ட அரசாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு இருப்பதே இதற்குக் காரணம்.
மோடி பிரதமரானவுடன் அவர் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதை சுற்றுலா நோக்குடன் எள்ளி நகையாடுவோர் உள்ளனர். ஆனால், வெளிநாட்டுப் பயணங்களின் பயன்பாடு பற்றி அறியாத, வெளியுறவுக் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சியில் கொண்டுள்ள பங்களிப்பை அறியாதவர்கள் தான் அவ்வாறு பேசுவர்.
மோடி பயணம் செய்துள்ள நாடுகளின் பட்டியலைக் காணும் எவரும், தெளிவான இலக்குடன் அவரது பயணம் அமைந்து வருவதை உணர்வர். அவரது முதல் வெளிநாட்டுப் பயணம், நமது நெருங்கிய நட்பு நாடான பூடானுடன் (2014, ஜூன் 16-17) நிகழ்ந்தது. அதன்மூலம், தனக்கு மிகவும் நம்பிக்கையான பூடான் நாட்டின் மீது சீனாவின் வல்லாதிக்கம் செலுத்த முடியாதவாறு பாசவலையை இறுக்கியது இந்தியா.
அடுத்து பிரிக்ஸ் மாநாட்டிற்காக பிரேசில் நாட்டிற்கு (2014, ஜூலை 13-16) மோடி சென்றார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய வளரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் மோடியின் பேச்சுகள் அனைத்தும் உலக கவனத்தைக் கவர்வதாக இருந்தன. மோடியின் ஆலோசனைப்படி, பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. உலகின் வல்லரசு மனோபாவத்திற்கு வலுவான தடையாக இந்திய- பிரேசில் உறவு இருக்கும் என்பதை உலகுக்கு அந்த மாநாடு உணர்த்தியது. தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் (UNASUR) பல தலைவர்கள் இந்த மாநாட்டிற்கு வந்ததும், அவர்கள் இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்ததும் முக்கியமான நிகழ்வுகளாக அமைந்தன.
காண்க: பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!
நேபாள நாடாளுமன்றத்தில் மோடி
அதையடுத்து, இந்தியாவின் மிக நெருக்கமான கூட்டாளியாக இருந்திருக்க வேண்டிய, அதேசமயம் (2014 ஆக. 3-4) நம்மிடம் இருந்து வெகுவாக விலகிப் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.