peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a---------------------------------tamil1.peperonity.net

பிதாமகனின் உறக்கம்: லீ குவான் யூ

‘சிங்கப்பூரை வாழ வைக்க வேண்டிய கடமை யாருக்கும் இல்லை’ என்று சொன்னவர் சென்ற வாரம் காலமான சிங்கப்பூரின் தந்தைலீ குவான் யூ. சிங்கப்பூர் என்கிற ஒரு ஊர் சிட்டுக்குருவியைப் போன்றது. சிட்டுக்குருவி பறப்பதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லாத பறவை. இருந்தாலும் பறக்கிறது. அதுபோல ‘சிவப்புப் புள்ளி’ ( ரெட் டாட் ) என்று அழைக்கப்படும் சிங்கப்பூரும் தனி நாடாகத் திகழ எந்தத தகுதியும் இல்லை. இருந்தாலும் எல்லா முரண்களையும் தடைகளையும் மீறிச் சிட்டுக்குருவியைப் போல உலக வானில் சிறந்து விளங்குகிறது என்றால் அதற்குக் காரணம் லீ குவான் யூவே.
சிங்கப்பூர் தனி நாடாக வாழ வேண்டும் என்றால் அது தன்னிறைவு பெற்றதாக இருக்க வேண்டும். ஆனால் காற்று ஒன்றைத் தவிர இயற்கை வளங்கள் எதுவும் இல்லை, தண்ணீர் உட்பட. ஆனால் இப்படி இருப்பினும் இன்று உலகின் தலை சிறந்த, ஊழலற்ற, மக்களுக்குச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை அளித்துள்ள நாடாகச சிங்கப்பூர் திகழ்கிறது என்றால் அது ஹாரி என்று சிறு வயதில் அழைக்கப்பட்ட லீ குவான் யூ என்கிற தன்னிகரில்லாத் தலைவனின் முயற்சியாலேயே என்று கூறலாம்.
காலனி ஆதிக்கத்தின் பிடியில் இருந்து மலேசியா வெளியேறிய போது சிங்கப்பூரும் அத்துடன் இணைந்திருந்தது. ஆனால் தன் மக்களிடையே மத ரீதியாக வேறுபடுத்திப் பார்த்த மலேசியாவிலிரிந்து 1965ல் பிரிய வேண்டிய சூழல். ஏற்பட்டது. நிலையில்லாத அந்தக் காலகட்டத்தில் துணிந்து முடிவெடுத்து சிங்கப்பூர் என்னும் ஒரு தனி நாட்டை உருவாக்கினார் திரு லீ. ஆனால் சென்னையைவிட சிறிய நில அளவேயுள்ள தீவான சிங்கப்பூர் தனி நாடாக இயங்க மலேசியாவும், இந்தோனேசியாவும் அனுமதிக்குமா என்கிற கேள்வி அனைவர் மனதிலும் இருந்து வந்தது.
அங்குதான் லீயின் மதி நுட்பமும் சாதுர்யமும் மிளிர்கின்றன. இங்கிலாந்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார் லீ. இங்கிலாந்தின் இராணுவம் கணிசமான ஆண்டுகள் சிங்கப்பூரில் நிருத்தப்படும் என்பதே அந்த யுக்தி. அந்த நேரத்தில் தனது இராணுவ பலத்தைக் கூட்டவும், பொருளியலில் ஒரு ஸ்திரத்தன்மையை அடையவும் அது வழி வகுக்கும் என்கிற இராஜ தந்திர ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.