peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a----------------------------tamil1story.peperonity.net

Naanum en Nanbarkalum - 1

கதிரவனுக்காகவே காத்திருந்தவர்களைப் போல, குட்டிச்சுவரில் உட்கார்ந்திருந்த அவனது நண்பர்கள்
குதித்துக் கீழே இறங்கினர்.'ஏதோ பிரச்சினை!'என்பது மட்டும் புரிந்தது.
"என்னாச்சுடா?"என்று கேட்டான் கதிரவன். அந்த ஏரியாவில் இருந்த சின்ன வயசுப் பசங்களுக்கு
அவன் தான் விஜயகாந்த் மாதிரி.
"எல்லாம் இந்த ஜெயஸ்ரீ மாமியோட தொல்லை தான்,"என்று விரக்தியோடு சொன்னான் ராபர்ட்.
"என்னடா ஆச்சு? இன்னிக்கு யாரைக் கவுத்தாங்க மாமி?"என்று பொங்கி வந்த கோபத்தை அடக்கியபடி
கேட்டான் கதிரவன்.
"ஒண்ணுமில்லேண்ணா, ரஜாக்பாய் கடையிலே நான் சிகரெட் குடிச்சிட்டிருந்தேனா? ஜெயஸ்ரீ மாமி
பார்த்திட்டாங்க! நேரா போய் எங்கப்பா கிட்டே போட்டுக் கொடுத்திட்டாங்க! கேட்கணுமா, பெல்டை
எடுத்து விளாசிட்டாரு விளாசி! தொடையெல்லாம் பாளம் பாளமா பொளந்திருச்சுண்ணா,"என்று
கண்களைக் கசக்கினான் பதினாறு வயதான கிச்சா!
"இந்த மாமிக்கென்னடா வந்தது நீ சிகரெட் குடிச்சா?"கதிரவன் கொதித்தான்.
"என்னமோடா, இந்த மாமி வந்ததிலேருந்து ரொம்ப தொல்லை ஜாஸ்தியாயிட்டே போகுது,"என்றான்
ராபர்ட்."இப்படித் தான் அன்னிக்கு நான் என்னோட ·பிகரைப் பார்த்துப் பேசிட்டிருந்தேன். பார்த்திட்டுப்
போய் அவ அம்மா கிட்டே போட்டுக் கொடுத்திட்டா மாமி. இப்ப அவ எங்கே போனாலும் கூடவே அவ
அண்ணனும் கடோத்கஜனை மாதிரி கூடவே வந்திட்டிருக்கிறான்."
5ண்மை தான்! ஜெயஸ்ரீ மாமி வந்ததிலிருந்தே வயசுப்பசங்களுக்கு அந்த காலனியில் வசிப்பதே
நாளுக்கு நாள் சிரமமாகிக் கொண்டிருந்தது. கிரிக்கெட் விளையாடினால் பந்தைப் பிடுங்கிக் கொண்டு
போய் விடுவாள். பீடி, சிகரெட் பிடித்தால் எல்லா வேலையையும் விட்டு விட்டு முதலில் போய் போட்டுக்
கொடுத்து விடுவாள்! காலனியில் இருந்த மற்ற பெண்மணிகளுக்கு விதவிதமாக உணவு வகைகளை
எப்படி செய்வது என்று சொல்லிக் கொடுத்து காக்காய் பிடித்து வைத்திருந்தாள் ஜெயஸ்ரீ மாமி. குறுகிய
காலத்திலேயே அவள் காலனியில் மிகவும் பிரபலமானதோடு, எதுவானாலும் வீட்டில் இருந்த பெண்கள்,
'எதுக்கும் ஜெயஸ்ரீ கிட்டே ஒரு வார்த்தை கேட்டுருவோம்'என்று சொல்லுமளவுக்கு அவர்களது
மூளையை சலவை செய்து வைத்திருந்தாள்.
"இதுக்கு ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.