peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a----------------------------tamil1story.peperonity.net

Pani vilum malarvanam - 2

கொடைக்காணலில் கோக்கஸ் வாக் அருகே கொடை ரெஸார்ட்ஸ்ஸில் ஒரு காட்டேஜ் எடுத்தோம்.(சீஸன் என்பதால் ரெக்கமன்டேசனுடன்தான்) கொடைக்காணல் பயனம் திடீரென்று முடிவானதால் கடைக்குச் சென்று ட்ரெஸ் வாங்கினோம். நான் மம்தாவிற்கும் மம்தா எனக்கும் செலக்ட் செய்தோம். நான் அவளுக்கு வெளிர் மஞ்சள் நிறத்தில் டீசர்ட்டும், ஆர்மி க்ரீன் கலரில் டெனிம் கேப்ரீஸ¤ம் பின் ஒரு சார்ட்ஸ்ஸ¤ம் காட்டன் சர்ட்டும் எடுத்தேன். அவள் எனக்கு கருப்பில் ஒன்றும் க்ரே கலரில் ஒன்றுமாக 2 சார்ட்ஸ்ம் 2 டீசர்ட்டும் எடுத்தாள்.

ரூமிற்குத் திரும்பும் வழியில்"அர்ஜுன் நீ வேனா லிக்கர் எடுத்துக்கிறது என்றால் எடுத்துக்க"என்றாள். நான் வேண்டாம் என்றேன். அவள் ஏன் வேண்டாம் என்றாள்.."இல்லை மம்ஸ் எனக்குத் தனியாக் குடிச்சு பழக்கமில்லை.. கம்பெனி இருந்தாதான் என்ஜாய் பன்ன முடியும்"என்றேன். 2 நிமிடம் சென்றதும்"நான் வேனா கம்பெனித் தரேன் வாங்கு"என்றாள்.."நிஜமாவா"என்றேன்."ம்ம் ஆனா ஒரு பெக் தான் மீதி யெல்லாம் நீதான் குடிக்கனும்.. அப்புறம் குடிச்சுட்டு என்னைப் பத்தி உன் மனதில் உள்ளதை உளரனும் சரியா?"என்றாள்.

நான் அங்கு இருந்த ட்யூட்டி ·ப்ரி கடையில் ஒரு ரக்ஷ்யன் வோட்கா (மெட்டில்டா) வாங்கினேன். கலப்பதற்காக சோடாவும், டொமெட்டோ ஸ்க்வாஸ்ஸ¤ம், கொஞ்சம் லைம் கார்டியலும் வாங்கிக் கொண்டேன். ரூமிற்கு வந்ததும் கொஞ்ச நேரம் டீவி பார்த்துக்கொண்டே தூங்கினோம். மாலை 6 மணிக்கு எழுந்து குளித்து விட்டு சைட்டிஸ் ஆர்டர் செய்தோம். பின் 2 க்ளாஸில் வோட்காவைக் கலந்தேன். ச்சியர்ஸ் சொல்லி ஒரு சிப் குடித்தவள்"என்ன அர்ஜுன்"லிக்கர் தானா டொமெட்டோ ஜூஸா"என்றாள். நான் ஒரு பெக் குடித்ததும் என்னை இன்னொன்று எடுத்துக்க சொன்னாள். இரண்டாவதயும் முடித்ததும்.."இப்ப சொல்லு என்னை பத்தி உன் மனதில் உள்ளதை சொல்லு ப்ளீஸ்..ப்ளீஸ்"என்றாள். நான் ஒரு சிக்கன் துண்டைக் கடித்துக் கொண்டு இன்னொரு பெக் ஊற்றினேன். கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துக் கொண்டே ஆரம்பித்தேன்.

"மம்ஸ் உன் கிட்டப் முதலில் பிடித்ததே நீ உன்னைச் சுற்றி உள்ள அத்தனைப் பேர் தேவைகளையும் பார்த்துப் பார்த்து செய்வதுத்தான்.. அடுத்தவங்களுக்கு அவ்வளவு முக்கியம் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.