peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a----------------------------tamil1story.peperonity.net

Rathiri nerathu poojayil - 2

அந்த வெள்ளி கிழமையும் வந்துவிட அலுவலக வேலைமுடிந்ததும் வீட்டிற்கு போய் குளித்துவிட்டு துணிகளை எடுத்துகொண்டு கிளம்ப வழியில் கீர்த்தனாவும் இணைந்துகொண்டாள். புத்தம் புது மலராய் நீலக்கலர் சேலையில் தங்க சிற்பம் போல் ஜொலிக்க வந்து நின்றாள்.

ரொம்ப அழகா இருக்கடீ கீர்த்தனா...! என்றேன் கொஞ்சம் பொறாமையோடு.

நீ மட்டும் என்னவாம் படு அமர்க்களமா இருக்க...! என்றாள் புன்னகைத்தபடி.

பின் பஸ்ஸை பிடித்து அமர்ந்ததும் ஏனோ ஒருவித பயம் மனதை கவ்வ தவிப்போடு இருந்தேன். என்னடி ஆச்சி உனக்கு...? என்றாள். என்னமோ தெறியலை பயமா இருக்கு, பேசாமல் அவரையும் கெஞ்சி அழைத்து வந்திருக்கலாமோனு தோனுது என்றேன்.

ஆமா.... அந்த ராட்ஷஸி பேச்சை கேட்காமல் மனுசன் நீ கூப்பிட்டதும் ஓடி வந்துவிடுவார் பார்...! எதுக்கு நீயும் பயந்து என்னையும் பயமுறுத்தர....! நாம என்ன கொலையா பண்ண போகிறோம் எல்லோரும் தினம் தினம் பண்ணும் பூஜை பரிகாரம்தானே பண்ணபோகிறோம் என சொல்ல மனம் நிம்மதியடைந்தது. பின் அலுவலக விஷயங்களை பேசிகொண்டே போனதில் இருவருமே கலகலப்பானோம்.

அந்த இடத்தை அடைந்த போது மணி எட்டாகியிருக்க, எப்படி குடிலுக்கு இந்த இருட்டில் போவது என இருவரும் யோசித்தபடி பஸ்ஸில் இருந்து இறங்க எங்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது, அந்த இளம் சாமியார் ரோட்டின் மறுபக்கம் நின்றுகொண்டிருப்பதை கண்டு நிம்மதியடைந்தோம்.

ரோட்டை கடந்து மறுபக்கம் சென்றதுமே எங்களை புன்னகையோடு
வாருங்கள் அம்மா...! உங்களை அழைத்துபோகவே ஸ்வாமிகள் என்னை அனுப்பினார் என்றார். அதை கேட்டதுமே அவர் மேல் இருந்த நம்பிக்கை பலமடங்காக அதிகரித்தது.

எவ்வளவு நேரமாய் காத்திருக்கிறீர்கள் ....? என நான் கேட்க

''சுமார் இரண்டு மணி நேரமாய் காத்திருக்கிறேன் அம்மா...! அதனால் எனக்கொன்றும் சிரமம் இருக்கவில்லை...! என்றார்.

அதைகேட்ட கீர்த்தனாவும் ஸ்வாமிகளை பற்றி என்னிடம் புகழ, அவளுக்கும் பலமடங்கு நம்பிக்கை வந்திருப்பதை புரிந்துகொண்டேன். குடிலை அடைந்ததும் அலுவலகத்தில் எங்கள் பெட்டிகளை வைத்துவிட்டு அமர்ந்திருக்கும்படி சொல்லி உள்ளே சென்றுவிட, அன்று தோட்டவேலையாட்களும், அலுவலக ஊழியர்களும் பார்க்கவந்தவர்களும் என கூட்டமாய் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.