peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a----------------------------tamil1story.peperonity.net

ரம்யா. . .ரம்யா. . .

மிக அழகான முக லட்சணமும், பார்த்த உடனே வசீகரிக்கும் தோற்றமும், ஒரு முறை பார்த்த பின்னும், மேலும் மேலும் பார்த்துக் கொண்டு இருக்கவேண்டும் என்ற ஆவலும் சில பெண்களை பார்த்தால் நமக்கு தோன்றுவதுண்டு. ரம்யா அந்த வகை தான். சுமாராக இருக்கும் நடிகைகளையே நாம் பேரழகிகள் என்று போற்றுகிறோம். காரணம் சினிமா. அதன்பால் நமக்கு இருக்கும் ஒரு வித கவர்ச்சி. ஆனால் அவர்களை விட அழகாக இருக்கும் எத்தனையோ பெண்களை நாம் அறிவதில்லை. அது போன்ற பெண்களை எப்போதோ. . . வழியிலோ. . . எதேர்ச்சையாகவோ காண்பதுண்டு. அவர்களின் அழகில் மயங்கி விழுவதுமுண்டு. இதை நாம் பல இடங்களில் அனுபவித்திருப்போம். அது போலத்தான் நம்முடைய ரம்யாவும். அறியப்படாத ஒரு அற்புத அழகி அவள். பார்த்த உடன் சுண்டி இழுக்கும் அவளின் மாசற்ற பளிங்கு உடலும், எப்போதும் புன்னகை தவழ்ந்து கொண்டிருக்கும் அவளின் அழகிய முகமும், கண்களும், இதழ்களும், இவ்வாறு அவளின் ஒவ்வொரு அங்குலமும் வார்த்தைகளுக்கும், வர்ணனைகளுக்கும் அப்பார்ப்பட்டவை. ரம்யாவின் அழகுக்கு உதாரணமாக நீங்கள் உங்கள் வாழ்வில் சந்தித்த ஏதேனும் ஒரு மறக்க முடியாத ஒரு அழகிய பெண்ணை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ரம்யாவின் அப்பா சிறு வயதிலேயே இறந்து விட்டதால், அம்மா தான் கஷ்டப்பட்டு படிக்க வைத்தாள். ரம்யா அப்போது கல்லுரி 2 ஆம் வருடம் படித்துக் கொண்டிருந்தாள். ஏற்க்கனவே உடல் நலம் குன்றியிருந்த அம்மாவும் திடீரென காலமானது ரம்யாவை விரக்தியின் உச்சிக்கே கொண்டு போனது. படிப்பை பாதியில் விட வேண்டிய கட்டாயம். உதவி செய்யும் படிக்கு எந்த சொந்தங்களும் இல்லை. எந்த சொத்துக்களும் கிடையாது. அம்மாவின் இறுதி சடங்குக்கே கடன் தான் வாங்க வேண்டியிருந்தது. எப்படியோ எல்லாம் முடிந்தது. அம்மா இறந்து 6 மாதங்கள் வரை சித்தி வீட்டில் தங்கியிருந்தாள். சித்தப்பா குணம் சரியில்லை. இனிமேலும் அங்கு இருக்க முடியாது. சரி என்ன செய்வது. கண்டிப்பாக அவள் சம்பாதிக்க வேண்டும். ஆனால் என்ன வேலை செய்வது. எங்கு போவது. எங்கு தங்குவது. இனி என் வாழ்க்கை எப்படி ???? கேள்விகள் ஆயிரம். . . பதில்கள் எங்கே????
சென்னை ரம்யாவை அழைத்தது. . . அப்போது ரம்யாவுக்கு வயது 20. . .




அன்று இரவு சித்திக்கும் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.