peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a----------------------------tamil1story.peperonity.net

மாலதி - 8

8) ஹலோ பிரண்ட்ஸ். தாமதத்துக்கு மன்னிக்கவும். கடந்த சில நாட்களாக என்னுடைய வேலைப்பளுவின் காரணமாக கதையை அப்டேட் செய்ய முடியவில்லை. பொறுமையுடன் காத்திருந்த அனைவருக்கும் நன்றி. இந்தக் கதை நோட்ஸ் ஆன் தி ஸ்கேன்டல் எனும் ஆங்கிலப் படத்தின் கதையைப் போலிருப்பதாகக் கூறுவது எனக்கு வியப்பாக உள்ளது. அந்தப் படத்தை நான் பார்த்ததில்லை. இப்போது பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது. ஆனால் இது காப்பியடிக்கும் அளவுக்கு புதுமையான கதை ஒன்றும் இல்லை நடைமுறையில் நடக்கக் கூடிய ஒன்றுதான். தொடர்ந்து உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். நன்றி.
http://f0.peperonity.net/c/E017BB/462479/ssc3/home/067/a-----------...
மணி ஒன்பதாகி விட்டிருந்தது. 'ரொம்ப நேரமாச்சு சாப்பிட்டு விட்டு போ' என்று சொன்ன மாலதி சூடாக சாதம் வைத்து பரிமாறினாள். நான் சாப்பிடப் போகும் போது குறும்புடன் பார்த்தபடி கேட்டாள். 'கையை கழுவிட்டியா?' நான் சிரித்துக் கொண்டேன். அப்போது ஆர்த்தி ஸ்கூல் டீச்சரிடமிருந்து போன் வந்தது. பிக்னிக் தாமதமாகி விட்டதாகவும் வருவதற்கு இரவு பத்து மணிக்கு மேலாகி விடும் என்றும் கூறினார்கள். மாலதி எரிச்சலைடந்தாள். 'சே என்ன மேனேஜ்மென்ட். பத்து மணிக்கு மேல பொம்பளைப் புள்ளைகள கொண்டு வந்து விட்டா எப்படி வீட்டுக்கு வர முடியும்' என்று புலம்பிய படி கணவரிடம் சென்று விஷயத்தைத் தெரிவித்தாள்.
நான் சாப்பிட்டுவிட்டு எழுந்தேன். அதற்குள் கணவரிடம் பேசிவிட்டு வந்த மாலதி, என்னிடம் 'சிவா.. ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?' என்றாள்.
'என்ன மாலதி?'
'பிள்ளைங்கள கூப்பிட இவரால போக முடியாது. நானும் அந்த நேரத்துல போயிட்டு வரமுடியாது. அதனால உனக்கு சிரமம் இல்லேனா, நீ போயி கூப்பிட்டுட்டு வரமுடியுமா? அவர்கிட்ட சொன்னேன். உன்கிட்ட கேட்டுப்பாருனு சொன்னார்.'
(நான் யோசித்து விட்டு) 'சரி எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல. நான் போய் கூட்டிட்டு வரேன்.'
(அவள் மகிழ்ச்சியுடன்) 'ரொம்ப தேங்ஸ் சிவா.'
சிறிது நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். மாலதி கணவருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு பின்னர் அவளும் சாப்பிட்டாள். பின்னர் பாத்திரங்களைக் கழுவச் சென்றுவிட்டாள். அரைமணி நேரம் கழித்து நான் கிளம்பிச் சென்றேன்.
ஸ்கூலில் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.