peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a----------------------------tamil1story.peperonity.net

மாலதி - 46

http://f1.peperonity.net/c/5374DC/462775/ssc3/home/067/a-----------...
46) 'சிவா..'
'யெஸ்.. சொல்லுங்க சுதா.'
'இப்ப எங்க போறது?'
'ஹோட்டலுக்குதான். வேற எங்க?'
'இல்ல வேணாம்.' (அவள் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.)
'அப்புறம்.?'
'வேற எங்கயாவது போலாமே. நைட் தான் பஸ். அது வரை ஹோட்டல்ல போரடிக்கும்.'
'சரி எங்க போலாம்?'
'சென்னைல எனக்கு என்ன தெரியும். பீச் மட்டும்தான் கேள்விப்பட்டிருக்கேன்.'
'ஓகே.'
நான் ஆட்டோவில் ஏறி பீச்சுக்கு போகச் சொன்னேன்.
பீச் மணலில் இருவரும் நடந்தோம். அதிக வெயில் இல்லை. கடற்காற்று இதமாயிருந்தது. ஓரிடத்தில் படகு நிழலில் உட்கார்ந்தோம். சின்ன சின்ன வார்த்தைகள் தவிர வேறு எதுவும் பெரிதாகப் பேசிக் கொள்ளவில்லை.

'சுதா..'
'ம்ம்.' (கடலையே வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்.)
'ஏன் ஒரு மாதிரி இருக்க.'
'ஒன்னுமில்ல.'
'சாரி.'
'எதுக்கு?'
'என்னாலதான் நீ ரொம்ப டல்லாயிருக்க.'
ஒன்றும் சொல்லாமல் கடல் அலைகளைப் பார்த்தாள்.
'நான் ஏதோ எமோசன்ல அப்படி நடந்துகிட்டேன். வெரி சாரி சுதா.'
'ம்ம்.'
'நீ நார்மலா பேசு. ப்ளீஸ்.'
என்னை திரும்பி ஒரு முறை பார்த்தவள் லேசாக சிரித்துவிட்டு மணல் ஒட்டியிருந்த கையை தட்டி மணலை உதிர்த்தாள்.
'ம்ம்.'
நிமிர்ந்து உடலை லேசாக நெளித்துக் கொண்டாள். அப்போது சுண்டல் விற்கும் சிறுவன் வந்தான்.
'அண்ணே.. சுண்டல்ல்..'
'வேணாம்பா.'
(சுதாவிடம்) 'அண்ணி. நீங்களாச்சும் சொல்லுங்கண்ணி..'
(லேசான பதட்டத்துடன் அவனைப் பார்த்தேன்.) 'டேய் போடா.'
சுதா முதலில் பதறி பின்னர் மெல்லிய வெட்கத்துடன் அவனிடம் சுண்டலை வாங்கிக் கொண்டு என்னை பார்த்தாள். நான் காசை கொடுத்து அவனை அனுப்பினேன்.

அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த சுண்டல் பொட்டலத்தில் கை வைக்கப் போனேன். அவள் அதை விலக்கிக் கொண்டாள். நான் அவளை புரியாமல் பார்த்தேன்.
'போங்க. தர மாட்டேன்.' (குறும்புடனும் லேசான கோபத்துடனும் சொன்னாள்.)
'ஏன்.. எனக்கே இல்லையா? நான்தானே காசு கொடுத்தேன்.'
'நீங்க கடலைய சாப்பிடுங்க. இது எனக்கு.' (சுண்டல் பொட்டலத்தை தன் மடியருகில் மறைப்பது போல வைத்துக் கொண்டாள்.)
'ஹலோ. கடலைக்கு நான் எங்க போக. நீ வாங்கி குடு.'
'ஏன்.. அதான் நெறய கடலை போட்டுட்டு இருந்தீங்களே. அப்புறம் என்னவாம்.'
'வாட்.? என்ன சொல்ற.. புரியல.'
'ம்ம்.. ரொம்ப கடலை...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.