peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a----------------------------tamil2story.peperonity.net

Ninaive oru paravai - 3



நிச்சயதார்த்தம் ஆனாலே பெண்களுக்கு எங்கிருந்துதான் இந்த தைரியம் வருகிறதோ.. எக்ஸாம்ஸ் முடிந்ததும் மாலை ப்ரியாவின் வீட்டிற்குப் போகனும்னு எண்ணிக்கொண்டே மதியம் வீடு திரும்பினால் அங்கே என் வீட்டில் என் ப்ரியா எனக்காகக் காத்திருந்தாள். அன்று சமையல்கூட அவள்தானாம்.

அவள் பிறந்ததிலிருந்தே சோகமாகக் கழிந்த நாட்கள் கடந்த 2 மாதம் தானாம் தேர்வுக் காரணமாக நான் அவளைப் பார்க்கவேயில்லை.. 10 நாளுக்கு ஒரு முறை அவள் என் வீட்டிற்கு வருவாள் ஒரு 15 நிமிடம்தான் அப்புறம் நான் படிக்கப் போய்விடுவேன். அதனால் இனி கல்யானம் வரை கால எழுந்ததும் வந்துவிடுவாளாம்.. இரவு தூங்கத்தான் அவள் வீட்டிற்குச் செல்வாளாம்.. அவள் பெற்றோரிடமும் என் பெற்றோரிடமும் அனுமதியும் வாங்கியிருந்தாள்.

என் மீது உள்ள ஆசையினால்தானே என் ப்ரியா இதெல்லாம் செய்கிறாள்.. பதிலுக்கு அவள் அசந்துப் போற மாதிரி நானும் ஏதாவது செய்யனும்னு ஆசைப்பட்டேன். நான் எது நினைத்தாலும் என் ப்ரியா என் மீதுக் காட்டும் அன்பிற்கு ஈடாகாதுப் போலத் தெரிந்தது. அன்று இரவு வெகுநேரம் என்ன செய்யலாம் என் யோசித்துப் பார்த்தேன். 3 மாதன்களாக கண்விழித்துப் படித்த அச்தியில் தூங்கிப் போனென். மறுநாள் காலை எழுந்ததும் ப்ரியா வருவதற்குள் கடைக்குச் சென்று ஒரு தங்க செயின் வாங்கினேன். அவள் வந்ததும் அவளுடன் அமர்ந்த்து என் ப்யோடெட்டாவை எழுதினோம். அப்போதெல்லாம் கம்ப்யூட்டர் கிடையாது. எலெக்டானிக் டைப்ரைட்டர் தான்.. பயோ டேட்டாவை எழுதி எடுத்துக் கொண்டு ஒரு டி.டி.பி சென்ட்டரில் எலெக்டானிக் டைப்ரைட்டரில் கொடுத்து டைப் செய்யக் கொடுக்கப் போனோம். அடுத்த நாள் காலையில் வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள்.

பின் அங்கிருந்து பெசன்ட் நகர் அக்ஷ்டலட்சுமி கோவிலுக்குச் சென்றோம். அங்கே நான் வாங்கிவந்த செயினை தெய்வத்தின் சன்னதியில் அவள் கழுத்தில் அணிவித்தேன். பின்"ப்ரியா ஜனவரி 27ல் எல்லோர் முன் கட்டும் தாலியைவிட நான் இப்ப போட்ட செயினைத்தான் நான் தாலியா நினைக்கிறேன். இது நம் 2 பேருக்கு மட்டுமே தெரிந்த கல்யானம்.. நீயும் நானும் வாழப் போகும் வாழ்க்கையின் முதல் படி. இது எப்பவுமே உன் கழுத்தில் இருக்கனும்"என்றேன்.. ஆனால் உங்களில் எத்தனைப் பேர் நம்புவீர்களோ ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.