peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a----------------------------tamil2story.peperonity.net

Ninaive oru paravai - 2



சி.ஏ சேர்ந்த 1 1/2 வருடத்தில் முதல் அட்டெம்ட்டில் இன்டர் எக்ஸாம் பாஸாகினேன். இந்திய அளவில் 60 ஆவது ரேங்க். ப்ரியா எனக்கு ஒரு ரேபான் க்ளாஸும் பர்ஸ்சும் வாங்கித் தந்தாள். ஃபைனலுக்கு இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.. அந்த சமயத்தில் ஒரு நாள் ப்ரியாவின் காலெஜில் 3 நாள் டூர் கிளம்பினார்கள்.. நான் நானும் பைக்கில் வருவதாகச் சொன்னேன். ஃபைனல் எக்ஸாம்க்கு படிக்க ஆரம்பிக்கும் முன்னால் 1 வாரம் ரிலாக்ஸ் பன்னனும் என்றேன். அவள் அதெல்லாம் ஒத்து வராது என்றும் உடன் வரும் ப்ரஃபஸ்ர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்றும் சொன்னாள். நான் அவளை ஏதாவது காரனம் காட்டி டூர் போகாமல் கழண்டு விடுமாறும் நாங்கள் இருவர் மட்டும் எங்காவது செல்லலாம் என்றும் சொன்னேன். அவள் வீட்டிலும் ப்ரியா காலேஜ் டூர் போயிருப்பதாக நம்புவார்கள் எனத் திட்டமிட்டேன். அவளும் சம்மதித்து டூர் கிளம்பும் நாளில் கண்ணில் யூக்கேலிப்டஸ் ஆயிலைத் தடவிக் கொண்டு கண் சிவக்க, கண்ணீர் வடிய கூலிங் க்ளாஸ் போட்டுக் கொண்டு அவள் ப்ரஃப்ஸரிடம் மெட்ராஸ் ஐ என்று நிற்கவும் அவரும் அவள் டூர் வரவேண்டாம் என பர்மிக்ஷன் தந்தார். நாங்கள் என் பைக்கில் ஊட்டி நோக்கி சென்றோம்.

அந்த வயதில் 500 கி.மீ பைக்கில் போவது ஒரு கடினமாகத் தெரியலை. சென்னையில் ஆரம்பித்து ஒரே மூச்சில் மேட்டுப் பாளையம் சென்றடைந்தோம். நைட் அங்கே ஒரு லாட்ஜில் தங்கினோம்.. ஒரே பெட் ஆனால் நாங்கள் செக்ஸில் ஈடுபடவில்லை.. அந்த நேரத்தில் எனக்கு ப்ரியா என்கூட இருப்பதே சுகம்தான்.. நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அனைத்துக் கொண்டு இரவு முழுதும் தூங்கினோம். சென்னையிலிருந்து வரும்போது நான் ப்ரியாவிடம்"ப்ரியா என் கூட கிளம்பி வந்துட்டியே உனக்கு பயம் இல்லையா? நைட் என்னோட ஒரே ரூமில் தங்குவியா இல்லை தனித் தனி ரூம் போடவா"எனக் கேட்டேன். என் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள்.. முகம் சற்று வாட்டத்துடன் காணப்பட்டது.."அருன் எனக்கு உன்னைப் பற்றி தெரியும்.. நீதான் என்னை சரியாப் புரிஞ்சுக்கவில்லை..நீ என்னிடம் இப்படிக் கேட்டிருக்கக் கூடாது.. ஐ ரியலி ஃபீல் ·பார் திஸ்"என்றாள்.. நான் சாரி என்பதுப் போல என் ப்ரியாவின் கைகளைப் பிடித்துக் கொண்டேன்.

நாங்கள் ஊட்டியில் 2 நாட்கள் இருந்தோம்.. இந்த 2 நாட்களும் நிறையப் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.