peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a----------------------------tamil2story.peperonity.net

Nee thaane en pon vachantham - 2

நீதானே எந்தன் பொன்வசந்தம் - 2

அன்று ஸ்வேதாவுடன் கழித்த நேரம் ஏனோ என் கல்லூரி நாட்களை எனக்கு ஞாபகப் படுத்தியது. காரில் செல்லும் போது பழைய இளையராஜா பாடலைப் போட்டேன்.. அதன் இனிமையை ரசித்துக் கொண்டே காரை ஸ்வேதா வீடு நோக்கி ஓட்டினேன். இருவருமே ஒருவித கிளர்ச்சியில் இருந்தோம்.வீடு வந்ததும் ஸ்வேதா இறங்கிக் கொண்டாள்.. என்னிடம் வந்து"ஸ்ரீராம் நான் ஏதாவது தப்பா நடந்துக் கிட்டேனா?"என்றாள்."ச்சே ச்சே ஏன் இப்படிக் கேட்கிற"என்றேன்."இல்லை நடந்தது 75% தான் ஞாபகம் இருக்கு அதுவுமே க்ளியரா இல்லை. மெக்ஸிகன் காஃபி எபக்ட்டில் ஏதாவது உளறியிருப்பேனோ எனப் பயமாக இருக்கு"என்றாள்.

"வாட் டு யூ மீன்? எதை நினைச்சுப் பயப்படுற?"என்று நான் கேட்டதும் ஒரு பெருமூச்சு விட்டு"ஒன்னுமில்லை ஸ்ரீராம் நவ் ஐம் க்ளியர் சீ யூ டுமாரோ"என்றாள் ஆனால் அவள் கண்களில் எப்போதும் காணப்படும் தெளிவு இல்லை என்பது மட்டும் தெரிந்தது. நான் அவளிடம் விடைப் பெற்று எனது அபார்ட்மென்ட் வந்தேன்.

இரவு குளித்து முடித்ததும் எனது செல் அடித்தது எடுக்கப் போனேன் ஆனால் அதற்குள் கட் ஆகிவிட்டது. யார் என்றுப் பார்த்தால் ஸ்வேதா!! கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினேன் ஆனால் அவளிடமிருந்து மீண்டும் கால் வராததால் நான் போன் செய்தேன். மறுமுனையில் எடுத்த ஸ்வேதா"ஸ்ரீராம் ஐம் சாரி ரிங் ரொம்ப நேரம் போனதால நீங்க தூங்கியிருப்பீங்கன்னு கட் பண்ணிட்டேன்"என்றாள்."இல்லை ஸ்வேதா இன்னும் தூங்கலை சொல்லு என்ன விசயமா போன் பண்ணியிருந்தாய்?"என்றேன்."காரில் கேட்டதேத் தான் இன்று ஈவ்னிங் க்ளப்பில் ஏதாவது உளறியிருப்பேனோ எனப் பயமாயுருந்தது. அதுதான் க்ளாரி·பை பண்ணிக்கலாம் என போன் பண்ணினேன்"என்றாள்.

"ஸ்வேதா நீ எதுக்கு இப்படி பயப்படுறே அப்படியேத் தப்பா ஏதாவது பேசியிருந்தாலும் நான் மைன்ட் பண்ண மாட்டேன் ஓ.கே?"என்றேன்.

"தேங்க்ஸ் ஸ்ரீராம்.. அன்ட் தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங், ஃபார் தெ டின்னர் அன்ட் ஃபார் த கி·ப்ட் ஆல்சோ"என்றாள். நான் அதற்கு"சும்மா தேங்க்ஸ் சொன்னாப் போதாது ஒருநாள் அதைப் போட்டுக்கிட்டு ரேம்ப் வாக் பண்ணிக் காட்டனும்"என்றேன்."ச்ச்சீ... நாட்டி.... குட் நைட்"என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.

நான் திரும்ப அவளுக்கு ரிங் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.