peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a----------------------------tamil2story.peperonity.net

Thottaal boo malarum - 2

தொட்டால் பூ மலரும் பாகம் - 2

சென்னை வந்ததும் மறுநாள் கதிருக்கு ஒரு மெயில் அனுப்பினேன். அதில் ட்ரெயினில் நான் கண்டக் கனவை அப்படியே விவரித்து எழுதியிருந்தேன். அவனிடமிருந்து 4 நாள் கழித்துப் பதில் வந்தது. தயங்கித் தயங்கி எழுதியிருந்தான். நான் கனவுப்பற்றி எழுதியிருந்ததைப் பற்றி ஒன்றுமேக் குறிப்பிடவில்லை.. ஆனால் என்னை உயிருக்கு உயிராக நேசிப்பதாக எழுதியிருந்தான். முடிக்கும் போது ஆசை முத்தங்கள் என முடித்திருந்தான்.

நான் எழுதிய பதிலில் அவன் எனக்கு இதழில் தந்த முத்தங்கள் இனிமையாக இருந்தது என்று எழுதிய்ருந்தேன். அவன் அதற்கு இதழில் முத்தமிடவில்லை என்றுக் கூறியிருந்தான். நான் அதற்கு அனுப்பிய பதில் மெயிலில்.. ச்ச்சீ நீ ரொம்ப மோசம் கண்டக் கண்ட இடங்களில் முத்தம் தருகிறாய் என்று எழுதியிருந்தேன். அவனிடம் மவுனமே பதிலாக இருந்தது.

3 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அவனிடமிருந்து போன் வந்தது. ப்ராஜக்ட் ஒர்க்குக்காக Tcs கம்பெனிக்கு இன்னும் 10 நாட்களில் வர இருப்பதாகச் சொன்னான். அவன் ரோபோடிக்ஸ் எனும் பாடத்தில் எழுதிய ப்ரோக்ராம் தான் ஜப்பானில் பரிசை வென்றது. அந்த ப்ரோக்ராமை இன்னும் மேம்படுத்தி ஒரு ரோபோவை இய்க்குவதுப் பற்றி லைவ் ப்ர்ரஜக்ட் செய்யலிருப்பதாகவும் அதற்காக இந்த முறை 3 நாட்களும் பின் அடுத்த செமஸ்டரில் 4 மாதங்கள் சென்னையில் இருப்பான் என்றும் சொன்னான். அவன் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

ஒரு புதன் காலை கதிர் சென்னைக்கு வந்தான். வெள்ளி மதியம் வரை Tcs கம்பெனியில் வேலை.முதல் 3 நாட்களும் Tcs கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்தான். வெள்ளி மாலை அவனுக்காக சவேராவில் ஒரு ரூம் போட்டிருந்தேன். அண்று காலேஜ் முடிந்ததும் நானும் ப்ரீத்தியும் சவேரா சென்றோம். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு ப்ரீத்தி ஹாஸ்டலுக்குப் போய்விட்டாள். 7.30 மணியளவில் நாங்கள் இருவரும் பீச் சென்றோம்.

காந்தி சிலைக்கு நேராக கடலைப் பார்த்து நடந்தோம். அலை ஆரம்பமாகும் இடத்தில் இருவரும் அருகருகே அம்ர்ந்தோம். நான் கதிரைப் பார்த்து.."என்ன முடிவில் இருக்கிறாய்.. என் பெற்றோர்கள் அடுத்த மாதம் 4ம் தேதி இந்தியா திரும்புகிறார்கள். நான் உன்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.