peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a----------------------------tamil2story.peperonity.net

Thottaal boo malarum - 1

தொட்டால் பூ மலரும் - 1

என் பெயர் சுகந்தா. நான் பி.இ 2ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன் எனது நெருங்கிய தோழி ப்ரீத்தி. நாங்கள் படிப்பது சென்னையில். எனதுத் தந்தையும் தாயும் என் அக்காவின் டெலிவரிக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் 2ம் ஆண்டு தேர்வு முடிந்ததும் விடுமுறைக்கு ப்ரீத்தியின் வீட்டிற்கு செல்வதாக முடிவெடுத்தோம்.

ப்ரீத்தி தாய் இல்லாதப் பெண். மனைவி இறந்ததும் அவள் தந்தை குழந்தையாக இருந்த ப்ரீத்தியைப் பார்த்துக் கொள்ள உறவில் ஒருப் பெண்ணை மனமுடித்தார்.. ஆனால் ஏனோ ப்ரீத்திக்கும் அவள் சிற்றண்ணைக்கும் நெருக்கம் வரவேயில்லை. அதே நேரத்தில் சண்டையும் கிடையாது. ஆனால் அவள் அப்பா அவள் மேல் உயிரையே வைத்திருந்தார்.ப்ரீத்தியும் அவள் அப்பா மீது மிகுந்தப் பாசமுடையவள். அப்பாவின் மனம் கோணக்கூடாது என்பதற்காகவே அவரது 2 வது மனைவியிடம் சண்டைப் போடாமல் சகஜமாகப் பேசிவந்தாள். அவர்கள் ஊர் திண்டுக்கல் - பழனி சாலையில் ஒட்டன்சத்திரத்துக்கு 5 கி.மீ முன்னால் இடதுபுறமாகத் திரும்பும் சாலையில் கொடைக்காணல் மலையின் பின் புறமாக அமைந்துள்ள பாச்சலூர் கிராமம். இது ஒரு மலை வாசஸ்தலம். அதில் ப்ரீத்தியின் அப்பாவிற்கு 5000 ஏக்கர் நிலம் உள்ளது. கா·பியிலிருந்து, ஆரஞ்சு, ஏலக்காய்,வாழை என மலைப் பிரதேசத்தில் விளையும் எல்லா வகைத் தோட்டங்களையும் அடக்கிய ஒரு எஸ்டேட். அதன் ஒரு மூலையில் ஒரு சின்ன அருவியும் உண்டு. அந்த அருவியிலிருந்து ஓடிவரும் நீர் ஒரு சின்ன அனையில் தேக்கி வைக்கப்படும் அவர்கள் தோட்டத்தைச் சுற்றி யானை மற்றும் காட்டெறுமையிடமிருந்துக் காத்துக்கொள்வதற்காக முள் கம்பி வைக்கப்பட்ட வேலியிடப்பட்டிருந்தது. மொத்தத்தில் அவர்கள் தோட்டமே ஒரு கிராமம் போல இருக்கும். சுமார் 300 பேருக்கு மேல் அங்கு வேல செய்கிறார்கள்.

கல்லூரி விடுமுறை ஆரம்பித்ததும் நானும் ப்ரீத்தியும் ரயிலில் திண்டுக்கல் சென்றோம். அவள் அப்பா எங்களை அழைக்க ஸ்டேசன் வந்திருந்தார். ப்ரீத்தியின் அப்பா என்னை அன்புடன் விசாரித்தார். அங்கிருந்துப் பாச்சலூருக்கு காரில் சென்றோம்.கார் பயனம் முடிவதற்குள் என்னைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். நான் 5.4 அடி உயரம் எடை 51 கிலோ.. நல்ல சிவந்த நிறம். தலைமுடியை ஸ்ட்ரெயிட்டனிங் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.