peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a----------------------------tamil2story.peperonity.net

Vetti vacha thenkayula pooja pannuda - 4



சினிமா ஒரு வியாபாரம். சினிமா பற்றி தெரிந்தவர்களுக்கு இது நன்றாக தெரியும். இது கலைச்சேவையும் இல்லை, கத்திரிக்காயும் அல்ல. பல நடிகர், நடிகைகள் சொல்வதுபொல இது கலைத்தொண்டும் இல்லை. இது ஒரு கனவு வியாபாரம். இந்த கனவை நம்பி இருப்பவர்கள் நிஜத்தில் வாழும் பலருக்கு வாழ வாய்ப்பளிக்கும் தொழிற்சாலை. இங்குதான் எல்லார் பணமும் குவிக்கப்படுகிறது, எல்லார் கனவும் சேமிக்கப்படுகிறது - ஆம் மக்கள் விரும்பும் நிழலை உருவாக்கும் ஒரு நிஜ கனவு தொழிற்சாலை.

சென்னை ஆட்டோக்குள்ளேயிருந்து இருந்த வெளியே கடக்கும் சென்னையை பார்த்தேன். பேரூர்ந்துகள், ஆட்டோக்கள் றெக்கை கட்டிக்கொண்டு ஒன்றை ஒன்று கடந்து சென்றது லேசாக அச்சத்தை கிளப்பியது. நெரிசலான வட பழனி சாலை, நாகர்கோவில் இருப்பவனையும் சென்னைக்கு கட்டிப்போடும் பல ஸ்டுடியோக்கள் இருக்கும் இடம். ஆட்டோவிலிருந்து இறங்கினேன். வெய்யில் - வியற்வை. ஆட்டோவின் கை அகல கண்ணாடியிலேயே குனிந்து நெற்றி வியற்வையையை ஒற்றிக்கொண்டதை ஆட்டோ ட்ரைவர் வித்தியாசமாக பார்த்தான்.

ஏ.வி,எம் ஸ்டுடியோவிற்கு உள்ளே என் ஐ.டி கார்ட் காண்பித்து உள்ளே சென்றேன்.

ஒரு தளத்தில் ஒரு ஆந்திர ஹீரோ மஞ்சள் பேண்ட், கறுப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு ஒரு இள வயது ஹீரோயினியுடன் கன்னத்தோடு கன்னம் இழத்துக்கொண்டு இருந்தார். அந்த ஹீரோக்கு ஒரு காலத்தில் ஜோடியாக நடித்த அந்த நடைகையின் தாய்க்குலம் அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஏனெனில் இன்னும் பத்து வருடத்திற்கு பிறகு இதே ஹீரோ இந்த நடிகையின் மகளுடனே ஆட்டம் போட்டுக்கொண்டு இருப்பான். ஆனால் ஹீரோயின் வாழ்வு காலம் ஐந்து வருடம்தான்.

மற்றொரு தளத்தில் இன்னொரு ஹீரோ கேரள் மண்ணின் மகத்துவத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தார். இந்தியாவில் எல்லா மொழியும் அங்கு கலந்து இருந்தது.

சினிமா ஒரு உண்மையாக இந்தியா! இங்கு யாருக்கு மேலுக்கு வரலாம் - மக்கள் ஆதரித்தால். ரீபோக் ஷு போட்டுக்கொண்டு ஏழைக்களுக்காக பேசும் ஹீரோக்கள், அய்யப்பன் மாலை போட்டிருந்த வில்லன்கள், கால் மேல் கால் போட்டு தன் தாய்குலங்களோடு பேசிக்கொண்டு இருக்கும் நட்சத்திரங்கள், வாய்ப்புக்காக ஏங்கும் எக்ஸ்ட்ராக்கள் என்று ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.