peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a----------------------------tamil2story.peperonity.net

Vetti vacha thenkayula pooja pannuda - 3



மெதுவாக கேட்டேன் -"ஏன் ஆளுங்கட்சி உன்னை ஏன் குறிவைக்க வேண்டும்'.

அவன் பதில் பேசாமல் பக்கத்து ரூம் சென்றான். நான் அவனை பின் தொடர்ந்து சென்றேன். அந்த ரூம் அமர்களமாக இருந்தது. ஏ.சி குளிர் மெல்ல உடலை வருடிற்று. நல்ல ரூம் ப்ரெஷ்னர் மணத்தது. சுவற்றில் பல ஹாலிவுட் நடிகைகள் நிர்வாணமாக டாட்டா காட்டினார்கள். மர்லின் மன்றோ பறக்கும் தன் பாவாடையை பிடித்துக்கொண்டு இருந்தாள். டீ.வி ஒன்று F-டீவி காட்டிக்கொண்டு இருந்தது. பல மாடல்கள் அமைதியாக கேட் வாக் செய்திருந்தார்கள். அருகே இருந்த அலமாறியில் பல வெளிநாட்டு விஸ்கிகள், வோட்கா, ரம் என்று எல்லாம் நீட்டாக அடுக்கப்பட்டு ஒரு மினி பாராக காட்சி அளித்தது. ஏராளமான ஷீல்டுகள், கோப்பைகள், தாமரை பட்டயங்கள்.......அருண் சினிமா உழைப்பு !!!

அவனை பொறூமையாக தொடர்ந்து நான் அவன் பெட்டில் அமர்ந்தேன். அவன் அருகே இருந்த சோஃபாவில் அமர்ந்தான்.

"எவ்வளவு வருஷமாச்சு, இப்படி உன்னிடம் தனியா பேசி!"என்று சோம்பல் முறித்தான்.
"திசை திருப்பாதே, ஏன் ஆளுங்கட்சி உண்னை குறிவைக்க வேண்டும்'
"உனக்கு அமைச்சர் சின்னப்பன் தெரியுமா?'
'தெரியும்'
'அந்த ஆள் புதுப்படம் தயாரிக்க என்னிடம் கால்ஷீட் கேட்டான். அவன் படம் எடுக்க மாட்டான். என் கால்ஷீட்டை மற்ற தயாரிப்பாளர்களுக்கு விற்று பணம் செய்துடுவான். அதனால் நான் தரலை. எல்லா குடைச்சலும் கொடுக்கறான்.'

நான் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அவன் தொடர்ந்தான்.
"வானத்து பூக்கள் படம் தயாரித்தேன் - அவன் டீ.வியிலே படம் டப்பா என்று சொல்லிட்டாங்க! கதை புரியலன்னுட்டான். பெண்கள் கூட்டம் சினிமா தியேட்டர் பக்கமே வரல. அந்த படத்தோட வி.சி.டி காசேட் படம் வரத்துக்கு முன்னாலேயே ரிலிஸ் ஆயிடுச்சு! இப்போ என் ரெண்டாம் படம் கல்லூரி மணமும் கவுத்துக்கும் போலிருக்கு! முக்கிய நடிகை, நடிகர் எல்லாம் வேலைக்கு வராம மக்கர் பண்றான். வட்டி ஏறிட்டு இருக்கு! கவுந்துடுவேன் போலிருக்கு! இதுக்கெல்லாம் காரணம் சின்னப்பன்"

சினிமா அப்படித்தான். எல்லாம் இமேஜ்தான். இமேஜ் சரிந்தால் போச்சு! இன்னிக்கு ஒன், டூ என்று ஷாட்டுக்கு கிளாப் அடித்தவன் நாளைக்கு டைரக்டராவான். பெரிய டைரக்டர் என்பவன் டீ கடை வைக்கும் நிலைக்கு வந்து விடுவான். இது ஒரு சூதாட்டம் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.