peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a----------------------------tamil2story.peperonity.net

Anthapurathil oru makarani - 1



மதனாறு என்று அழைக்கப்படும் மதன நீராற்றுக் கரையில் இரு புறமும் பூக்கள் சொரிந்த மரங்களால் சூழப்பட்ட ராஜபாட்டையில் வெண்பட்டின் வெண்மையை தோற்கடிக்கும் வகையில் நிறம் கொண்ட உயர்ந்த சாதி குதிரை ஒன்று மெல்ல நடை போட்டு சென்று கொண்டிருந்தது. நதியின் இரு புறமும் கூதிபுரத்திற்கு இயற்கை அளித்த வனப்புகளை விழியால் பருகிக்கொண்டே குதிரையின் மேல் உட்கார்ந்து பயணித்துக் கொண்டிருந்தான் நம் கதாநாயகன் வெண்குஞ்சான். கரிச்சானூர் என்று அழைக்கப்படும் தன் நாட்டின் வனப்பு இதற்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல என்ற நினைப்பு அவன் மனத்துக்கு
மிகவும் தெம்பை அளித்தது.

இவ்வாறு அவன் இயற்கையின் இன்பத்தில் மனத்தை பறிகொடுத்து பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தபோது தான் நாலைந்து பெண்களின் அந்தக் கூக்குரல் கேட்டது."இளவரசியை சுழல் இழுத்துச் செல்கிறது, யாராவது காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்.". காப்பாற்றுங்கள் என்ற வார்த்தைகள் மட்டும்தான் தெளிவாக கேட்டது. குரல் கேட்டவுடன் அவன் குரல் எந்த திசையிலிருந்து வருகிறது என்று சுற்றும் நோக்கினான். அந்தப்பாதையின் இடது புறத்தில் ஒரு ஒத்தையடி பாதை செல்வதையும் அந்தப் பாதையின் இறுதியிலிருந்து தான் அந்தக்குரல் வருவதையும் அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. உடனே அவன் குதிரை வேகமாக அந்தப்பாதையினூடே செலுத்தினான். அரை காததூரம் பின்புறமாக சென்ற அந்தப்பாதையின் முடிவில் மதனாறு தன் முழு வேகத்துடன் சுழித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. அதன் கரையில் ஆறு சேடிப்பெண்கள் கத்திக்கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். நதியின் கரையிருந்து சிறிது தூரத்தில் ஒரு பெண்ணின் கைகள் மட்டும் மேலே மட்டும் தூக்கி அலைந்து கொண்டிருந்தது.

அந்தக்காட்சியைக்கண்டவுடன் குதிரையின் கடிவாளத்தை இழுத்த வேகத்தில் ஆற்று நீரில் குதித்தான். ஆறுகளின் தேசம் என்று அழைக்கப்படும் கரிச்சானூரில் பிறந்து வளர்ந்த அவனுக்கு அந்த ஆற்றில் நீந்துவது எளதாகவே இருந்தது. சீக்கிரத்திலேயே அந்தப்பெண்ணின் அருகில் வந்து விட்டான். இப்போது கைகளும் உள்ளே முழுகி அவளின் அடந்த கூந்தலின் நுனிப்பகுதி நீரின் பரப்பில் தெரிந்தது.

அந்தக்கூந்தலுக்கு கீழே ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.