peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------life.details.peperonity.net

பெண்களே, கிளைமேக்ஸ் சரியில்லைன்னா அனார்கஸ்மியா வரு

தாம்பத்திய உறவில் உச்சக்கட்டம் எனும் ஆர்கஸம் எனும் கிளைமேக்ஸ் சரியாக அமையாவிட்டால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தாம்பத்திய உறவில் ஈடுபடுவோரால் தொடர்ந்து ஆர்கஸத்தை அடையமுடியவில்லையென்றால் அது அனார்கஸ்மியா (anorgasmia) எனும் செக்ஸ் குறைபாட்டில்தான் முடியும் என்கிறார்கள் பாலியல்துறை ஆய்வாளர்கள்!

உறவின் போது உச்சக்கட்டம் என்பது பால் உறுப்புகளின் தூண்டுதலில் தொடங்கி, உடலளவிலான பலவகையான மாற்றங்களையும், மனதளவிலான சில மாற்றங்களையும் உள்ளடக்கிய ஒரு எழுச்சி நிலை. இந்த எழுச்சி நிலைக்கு உடலின் பல்வேறு பாலுறுப்புகளிலிருந்து மூளைக்கு செல்லும் ரசாயன சமிக்ஞைகளும், அதற்கான மூளையின் எதிர்வினையாய் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் உடலியக்க மாற்றங்களுமே காரணம்! இதனைத்தான் ஆங்கிலத்தில் ஆர்கஸம் என்கிறார்கள்.

அனார்கஸ்மியா குறைபாடு

உறவில் ஈடுபடும் அனைவருக்குமே ஆர்கஸத்தை அடைவதுதான் குறிக்கோள். ஆனாலும், இது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆரம்பம் நன்றாக அமைந்து கிளைமாக்ஸ் சரியில்லை என்றால் எதையோ இழந்த உணர்ந்த உடனே காணப்படுகின்றனர் தம்பதியர்.

குறிப்பாக பெண்களுக்கு ஆர்கஸம் என்ற நிலை எட்டப்படவில்லை எனில் எரிச்சல், மன அழுத்தம் போன்றவை கூட ஏற்படுகிறதாம். செக்ஸில் ஈடுபடுவோரால் தொடர்ந்து உச்சக்கட்டத்தை அடையமுடியவில்லையென்றால் அது அனார்கஸ்மியா (anorgasmia) எனும் செக்ஸ் குறைபாட்டில்தான் முடியும் என்கிறார்கள் பாலியல்துறை ஆய்வாளர்கள்!

வாழ்க்கைத்தரம் பாதிக்கும்.

அனார்கஸ்மியா குறைபாடு ஒருவரின் வாழ்க்கைத்தரத்தையும், உறவுகளையும் பாதிக்கக்கூடியது என்கிறார் அமெரிக்காவின், லாஸ் ஏஞ்ஜலீஸிலுள்ள செடார் சினாய் மருத்துவ மையத்தின் உளவியல் ஆய்வாளர் வாகி வில்லியம் இஷக்!

கடந்த 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 20 முதல் 40 வயதான பெண்களில், சுமார் 24% பெண்களுக்கு மாதக்கணக்கில் உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை இருப்பது கண்டறியப்பட்டது என்றும், அனார்கஸ்மியா குறைபாட்டினால் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.