peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------life.details.peperonity.net

அன்புடன் அந்தரங்கம் - 7 நாட்கள் மட்டுமே உடலுறவு -

நான், என் மனைவி இருவருமே வெவ்வேறு
மாவட்டங்களில் பணியாற்றும்
காவல்துறை அதிகாரிகள்.
எங்களுக்கு திருமணம்
முடிந்து ஐந்து வருடங்களாகி விட்டது.
இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த
ஐந்து வருடங்களில், ஒரு நாள் கூட நாங்கள்
நிம்மதியாக வாழவில்லை. எங்களுக்குள்
என்றுமே நிம்மதியில்லாமல் வாழக் காரணம்,
என் மனைவி கூறும், "சூப்பர்' பொய்கள்.
இன்னும் இவள் திருந்தவில்லை. நானும்,
இவளும் சேர்ந்து உண்மையான
அன்போடு படுக்கையறையை பகிர்ந்து
கொண்டது சரியாக ஏழு நாட்களே.
தனது தம்பிகளிடம் அதிக பாசம்
வைத்திருப்பதாகக் கூறி, என்
வாழ்க்கையையும் கெடுத்து,
வேலை செய்யுமிடங்களிலும், வங்கிகளிலும்
தேவைக்கதிகமான கடனை வாங்கி கெட்ட
பெயர் எடுத்து விட்டாள்.
இவளை ஒரு விஷயத்தில் முழுமையாக
நம்பலாம். கற்பு என்ற விஷயத்தில் மட்டும்.
எனது நிலைமையோ இதை விட மோசம்.
கல்யாண வயதில் நிற்கும் என் தங்கை மற்றும்
வயதான தாய், தந்தை -
இவர்களை கவனிப்பதா! குழந்தைகளுக்காக என்
மனைவியின்
பல்வேறு தொல்லைகளை தாங்கிக் கொள்வதா!
மைத்துனர்கள் தரும்
துன்பங்களை தாங்குவதா!
என் மனைவிக்கு பல தடவை மாறுதல்
வாங்கித் தந்தும், என்னுடன் வாழ
அவளுக்கு விருப்பமில்லை.
தற்போது நான்கே மாதம் இறுதியான
கெடு கேட்டிருக்கிறாள். இன்னும்
ஒரு மாதம்தான் பாக்கி.
தற்பொழுது 35 வயதாகும்
எனது இளமை இவ்வாறே கழிந்து விடுமா
அல்லது விவாகரத்து செய்து விடலாமா என,
பல்வேறு கோணங்களில்
மூளை மழுங்கி இரவு, பகல் தூக்கமில்லாமல்
தவிக்கிறேன். எனது மனைவி திருந்துவாள்
என்ற நம்பிக்கை இல்லை. மைத்துனர்களும்
புத்தி சொல்லி அனுப்பும் வகை இல்லை.
தற்போது நான் இருக்கும் தனிமை பல கெட்ட
வழிகளில் ஈடுபடுத்தி விடுமோ என, மனம்
பயப்படுகிறது. பேசாமல் வக்கீலின் உதவியால்
ஒப்பந்த அடிப்படையில், ஒரு விபசாரிக்கு கூட
வாழ்வு கொடுக்கலாமா என்ற
எனது எண்ணங்களின்
ஓட்டத்தை தெளிவுபடுத்துவீர்களா?
தங்களின் பதில் ஒன்றே ஆறுதல்!
அன்பு சகோதரருக்கு—
உங்கள் கடிதம் கண்டேன். பல விஷயங்கள்
புரியவில்லை.
உங்களுக்குத் தெரியாமல்
அல்லது உங்களது அனுமதியில்லாமல் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.