peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a--1.tamil.sex.advice.peperonity.net

தம் அடிச்சா தாம்பத்ய உறவு பாதிக்கும்: ஆய்வில்

புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு புற்றுநோய்மட்டும் ஏற்படுவதில்லை ஆண்மைஇழப்பும் ஏற்படுகிறது என்று சீனாவில் நடைபெற்ற ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புகை பிடிப்பதற்கும்தாம்பத்ய குறைபாடுக்கும் உள்ளதொடர்பு பற்றி ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரப் பிரிவு விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டது. உறவின் போது சிக்கலை சந்திக்கும் 30 முதல் 50 வயதுக்கு உட்பட 700ஆண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
அவர்களிடம் 3 ஆண்டுகள்பல்வேறு கட்ட ஆய்வு நடத்தப்பட்டன. தாம்பத்ய உறவில் ஈடுபாடு குறைவு, ஆர்வம்இருந்தாலும் ஈடுபட முடியாமை ஆகிய பிரச்னைகளில் தவித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றவர்களில் 53.8 சதவீதத்தினர் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட பிறகே சிகிச்சைக்கு பலன் கிடைத்தது என்றனர். புகை பழக்கத்தை கைவிட்ட 6 மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறினர். விரைப்புத்தன்மை குறைபாடுக்கு சிகிச்சைபெற்றவர்களில் புகை பழக்கம் இருந்தவர்கள் அதை நிறுத்திய பிறகே பலன் கிடைத்ததாக தெரிவித்தனர். இதுபற்றி ஆய்வுக் குழு பேராசிரியர் சோபியா சான் கூறுகையில், "சீனாஉள்ளிட்ட ஆசிய
கண்டங்களைச் சேர்ந்தநாடுகளில் விரைப்புத்தன்மை குறைபாடு அதிக ஆண்களிடம் உள்ளது. இதற்கு பெரும்பாலோர்புகைபிடிப்பதே காரணம்" என்றார்.இதுஆண் உறுப்புகளை இரு விதங்களில் பாதிக்கிறது. ஆண் உறுப்பிற்கு சரியான அளவில் ரத்த ஓட்டம் கிடைப்பதில்லை என்றும்ஆய்வாளர் கூறியுள்ளார். "புகை பிடிப்பதால் புற்றுநோய், நுரையீரல் நோய்கள் ஏற்படும் என்று மட்டுமின்றி ஆண்மையிழப்பு உட்பட தாம்பத்ய குறைபாடுகளும் ஏற்படும்" என்று ஆய்வினை மேற்கொண்ட பேராசிரியர் தாய் ஹிங் கூறியுள்ளார்.


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.